எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் பிரித்விராஜ் தொண்டைமான் தலைமையில் 5 பேர் கொண்ட குழு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் பங்கேற்கவுள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பை இந்திய தேசிய ரைபில் கூட்டமைப்பு இன்று (ஜூன் 18) வெளியிட்டது.
இதில் ஷாட் கன் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார். இவர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். ஆண்கள் பிரிவில் புவனேஷ் மெந்திரத்தா, அனன்ஜீத் சிங் நரூகா, ஆகியோரும் பாரீஸ் ஒலிம்பிக்கிம் பங்கேற்கவுள்ளனர்.பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி முகாரி, ரைசா தில்லான், மகேஷ்வரி செளஹான், ஸ்ரேயாஸி சிங் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
_____________________________________________________________________
நியூசிலாந்து ஆறுதல் வெற்றி
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தரோபா நகரில் நடந்த 39-வது லீக் ஆட்டத்தில், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, பப்புவா நியூ கினியாவுடன்(சி பிரிவு) மோதியது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மழை நின்றதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பப்புவா நியூ கினியா முதலில் பேட்டிங் செய்தது.
இறுதியில் பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 12.2 ஓவர்களில் இலக்கை கடந்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நியூசிலாந்து அணி, ஆறுதல் வெற்றியுடன் தொடரை விட்டு வெளியேறியது.
_____________________________________________________________________
போல்ட்டுக்கு வில்லியம்சன் புகழாரம்
டி20 உலகக் கோப்பைத் தொடரில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பப்புவா நியூ கினியாவை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் உலக கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சேவகன் டிரண்ட் போல்ட் என அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அவரைப் பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது குறித்து போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது.,
ஒவ்வொரு தொடருக்குப் பிறகும் ஏதேனும் ஒரு விஷயம் நடைபெறும். நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடர் நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட் விளையாடும் கடைசி ஐசிசி தொடர். நியூசிலாந்து அணிக்காகவும், உலக கிரிக்கெட்டுக்காகவும் அவர் பல சாதனைகள் படைத்துள்ளார். அவர் நியூசிலாந்து அணியிலிருந்து விடைபெறுவதை பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது. நியூசிலாந்து அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். புதிய வீரர்கள் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பினை அவர் ஏற்படுத்தியுள்ளார் என்றார்.
_____________________________________________________________________
லாக்கி பெர்குசன் சாதனை
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - சி’ பிரிவு ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணியின் பவுலர் லாக்கி பெர்குசன், 4 ஓவர்கள் வீசி ரன் ஏதும் கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் வீசிய 24 பந்துகளிலும் ரன் ஏதும் கொடுக்காத முதல் பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். திங்கட்கிழமை அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
முதல் இன்னிங்ஸின் 5, 7, 12 மற்றும் 14-வது ஓவர்களை அவர் வீசி இருந்தார். இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இருந்தாலும் அந்த அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. தனது செயல்பாடு மகிழ்ச்சி தந்ததாகவும். பெரிய நம்பிக்கையுடன் களம் கண்ட தங்களது அணி முதல் சுற்றோடு வெளியேறுவது வருத்தம் தருவதாகவும் லாக்கி பெர்குசன் தெரிவித்தார். ஆட்ட நாயகன் விருதை அவரே வென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
12 Jun 2025மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 6,339 கன அடியாக உயர்ந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-06-2025.
12 Jun 2025 -
டில்லியில் கடுமையான வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை
12 Jun 2025புதுடில்லி: தலைநகர் டில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
பா.ம.க. தலைவராக நானே நீடிப்பேன்: ராமதாஸ் உறுதி
12 Jun 2025விழுப்புரம், 2026 தேர்தல் வரை நானே பா.ம.க. தலைவராக நீடிப்பேன் என்று ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
தென்காசியில் சோகம் ஆதரவற்றோர் இல்லத்தில் 3 பேர் பலி; 8 பேர் மருத்துவமனையில் அனுமதி
12 Jun 2025தென்காசி: தென்காசி அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்த வந்த 3 பேர் கெட்டுப்போன உணவு உண்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறாது: திருமாவளவன்
12 Jun 2025சிதம்பரம், தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழக மாணவர்கள் புதிய சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jun 2025சென்னை, யு.பி.எஸ்.சி. முதனிலைத் தேர்வு முடிவுகளில் நம் மாணவர்கள் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
முடிவுக்கு வந்தது மோதல்: எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்று கொண்ட அதிபர் டிரம்ப்
12 Jun 2025வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்து தான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
பாரதிய ஜனதாவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
12 Jun 2025திருச்சி, எங்கள் கூட்டணியில் இருந்து கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் எல். முருகன் எண்ணம் நிறைவேறாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
நிர்வாகிகளுடன் பிரேமலதா 2-வது நாளாக ஆலோசனை
12 Jun 2025சென்னை, தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார்.
-
பி.எஸ்.எப். வீரர்களுக்கு மோசமான ரயில்: 4 உயரதிகாரிகள் சஸ்பெண்ட்
12 Jun 2025புதுடில்லி, எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு மிக மோசமான நிலையில் உள்ள ரயிலை அனுப்பியதற்கு, 4 ரயில்வே உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
-
டெல்லியில், பத்திரிகை அதிபர்களுடன் ராஜ்நாத்சிங் கலந்துரையாடல்
12 Jun 2025டெல்லியில், பத்திரிகை அதிபர்களுடன் ராஜ்நாத்சிங் கலந்துரையாடல்
-
தண்ணீர் இல்லாத கிணற்றில் யார் குதிப்பார்கள்? அமைச்சர் பெரியசாமி
12 Jun 2025திண்டுக்கல், தி.மு.க. கூட்டணியில் இருந்து யாரும் போக மாட்டார்கள் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச செஸ் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு உதயநிதி வாழ்த்து
12 Jun 2025சென்னை: சர்வதேச செஸ் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 1 கோடி: டாடா குழுமம் அறிவிப்பு
12 Jun 2025புதுடில்லி: ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என்.
-
மிக கனமழை எச்சரிக்கை: கோவை, நீலகிரிக்கு பேரிடர் மீட்பு குழுக்கள் வருகை
12 Jun 2025கோவை, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வருகை தர உள்ளனர்
-
அமெரிக்க அதிபர் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்: 400 பேர் கைது
12 Jun 2025லாஸ் ஏஞ்சலீஸ்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது
-
விபத்தின் போது நடந்தது என்ன? டி.ஜி.சி.ஏ., விளக்கம்
12 Jun 2025புதுடில்லி, ஆமதாபாத்தில் விபத்துக்கு உள்ளான விமானத்தை இயக்கியவர் சுமீத் சபர்வால் அனுபவம் வாய்ந்தவர் என டி.ஜி.சி.ஏ., தெரிவித்து உள்ளது.
-
அமெரிக்காவில் காட்டுத்தீ 700 குடும்பங்கள் வெளியேற்றம்
12 Jun 2025ஓரிகன்: அமெரிக்காவில் காட்டுத் தீக்கு 700 குடும்பங்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர்.
-
அகமதாபாத் விமான விபத்து: அமித்ஷா, ராகுல் காந்தி இரங்கல்
12 Jun 2025புதுடில்லி, அகமதாபாத் விமான விபத்துக்கு மத்திய அமச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்.பி., ராகுல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
அகமதாபாத்தில் பிரிட்டனுக்கு கிளம்பிய விமான விபத்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர் அதிர்ச்சி தகவல்
12 Jun 2025லண்டன்: அகமதாபாத்தில் பிரிட்டன் நாட்டவர்களுடன் கிளம்பிய விமானம் விபத்துக்கு உள்ளானது கடும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது என அந்நாட்டு பிரதமர் கெயிர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
-
ஆமதாபாத் மருத்துவமனையில் குஜராத் முதல்வர் ஆய்வு
12 Jun 2025அகமதாபாத், விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஆமதாபாத் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
-
மனதை உடைக்கும் பேரழிவு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
12 Jun 2025புதுடில்லி, ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
-
6 மாதங்களில் 25வது முறையாக வெடித்த ஹவாய்த்தீவு எரிமலை
12 Jun 2025ஹவாய் தீவு: அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலாவியா எரிமலை வெடித்து உள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 25-வது முறையாக வெடித்துள்ளது.
-
சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு
12 Jun 2025டெல்லி: சந்தைகளில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.