எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பெங்களூரு : கர்நாடகாவில் இன்று முதல் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் துவங்குகிறது. காங்கிரஸ் அரசின் தோல்விகளை குறிப்பிட்டு, போராட்டம் நடத்தி திணறடிக்க பா.ஜ.க. ம.ஜ.த., திட்டமிட்டுள்ளன. இதை சமாளிக்க தயாராகும்படி, ஆளுங்கட்சியினருக்கு காங்கிரஸ் தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கர்நாடக சட்டசபையில் பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்தது. ஆறு மாதங்களுக்குள் அடுத்த கூட்டத் தொடர் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அந்த வகையில், மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11:00 மணிக்கு துவங்குகிறது.
சட்டசபை, மேலவை இரண்டிலும், மறைந்த பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அதன் பின், தன் அறிக்கையை செயலர் தாக்கல் செய்கிறார். முந்தைய கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஜனாதிபதி, கவர்னர் அளித்த ஒப்புதல் குறித்து செயலர் தெரிவிப்பார்.
அதன் பின், வெவ்வேறு உறுப்பினர்களின் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்து விவாதங்கள் நடக்க உள்ளன. இந்த மழைக்கால கூட்டத் தொடர் வரும் 26-ம் தேதி வரை நடக்கும்.
ஆனால், காங்கிரஸ் அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டி பா.ஜ.க., ம.ஜ.த. உறுப்பினர்கள் கூட்டாக போராட்டம் நடத்த முடிவு செய்துஉள்ளனர். என்னென்ன விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்டு திணறடிக்க வேண்டும் என சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி உட்பட இரண்டு கட்சித் தலைவர்களும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பும், இரண்டு கட்சித் தலைவர்களும், இன்று மீண்டும் ஒருமுறை ஆலோசனை நடத்த உள்ளனர். எப்படி செயல்பட வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு அறிவுறுத்த உள்ளனர்.
குறிப்பாக, வால்மீகி மேம்பாட்டு வாரியத்தில் நடந்த முறைகேடு விஷயம், மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் சார்பில் முதல்வர் மனைவிக்கு மனை ஒதுக்கிய விவகாரம், எஸ்.சி., எஸ்.டி.,யினர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொண்டது; விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியை வழங்காதது இப்படி பெரிய பட்டியலையே எதிர்க்கட்சியினர் தயார்படுத்தி வைத்துள்ளனர்.
இதே வேளையில், எதிர்க்கட்சியினரின் திட்டத்தை முறியடித்து, சமாளிக்கும்படி ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் அறிவுறுத்தி உள்ளனர். எதிர்க்கட்சியினர் போராட்டத்தை எதிர்கொள்வதற்காக, அமைச்சர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கூட்டத்தொடரில் பங்கேற்கும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக, தங்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றினாலும், விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தவும் எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இன்று விதான் சவுதாவை முற்றுகையிடுவதாக எதிர்க்கட்சி தலைவர் அசோக் தெரிவித்துள்ளார். எனவே, இம்முறை சட்டசபை கூட்டத்தொடர் பெரும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், வெவ்வேறு அமைப்புகள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்த உள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கையாக விதான் சவுதாவை சுற்றி 2 கி.மீ., சுற்றளவுக்கு இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில், காலை 6:00 மணி முதல், நள்ளிரவு 12:00 மணி வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமி சுமித் அபார சாதனை
06 Jul 2025பர்மிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.
-
இங்கி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்தியா
06 Jul 2025பர்மிங்காம்: ஆகாஷ் தீப் அபார பந்து வீச்சு காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.
-
ஜூலை 8-ல் த.வெ.க. பயிற்சி பட்டறை ஆலோசனைக்கூட்டம்
06 Jul 2025சென்னை: த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம், ஜூலை 8ம் தேதி பனையூரில் நடக்க உள்ளதாக அக்கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
அரசு கலை கல்லூரிகளில் நடப்பாண்டு 20 சதவீதம் கூடுதல் இடங்கள்: அமைச்சர்
07 Jul 2025சென்னை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
பறந்து போ திரைவிமர்சனம்
07 Jul 2025தனது மகனின் ஆசை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் தான் செல்லாத உயரத்திற்கு தன் மகன் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெற்றோரின் கதை தான் இந்த பறந்து போ படம்.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப