முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டனாக கில் சாதனை

திங்கட்கிழமை, 15 ஜூலை 2024      விளையாட்டு
Subman-Gill 2023 07 31

Source: provided

மும்பை : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணியின் கேப்டன் ஷூப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஓய்வுபெறுவதாக...

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உலகக் கோப்பை வென்றவுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க ஷூப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி அந்நாட்டு பயணம் மேற்கொண்டது.முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, அடுத்த 4 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 

4 போட்டிகளை... 

இந்நிலையில், வெளிநாட்டில் பங்கேற்ற டி20 தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை கில் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தொடரில் முதல் 4 போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக இருந்த நிலையில், 5-வது போட்டியில் அவர் விளையாடாததால் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். மேலும், அந்த தொடரில் இரண்டு போட்டிகள் டையில் முடிந்து, சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து