முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்: டாக்காவை விட்டு வெளியேறிய ஹசீனா:

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2024      உலகம்
Sheick-Hasina

டாக்கா, பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 

இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். 

இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்து விட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும், முந்தைய போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்க கோரியும் போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டம் காரணமாக நேற்று முன்தினம் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. 

இந்தப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இடையில் மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்நாட்டில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையை விட்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து ராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து