எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருக்கான அனைத்து மரியாதையும் வழங்கப்படும் என்று ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார். நாடு திரும்பும் வினேஷ் போகத்துக்கு, வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கு வழங்கப்படும் வரவேற்பும், மரியாதையும் வழங்கவும், வெகுமதி மற்றும் வசதிகள் செய்து தருவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் தொடரின் 50 கிலோ பெண்கள் எடை பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், புதன்கிழமை காலை கூடுதலாக 100 கிராம் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அரையிறுதியில் போகத்திடம் தோற்ற வீராங்கனை இறுதிப் போட்டியில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தை நாடியுள்ள வினேஷ் போகத், அரையிறுதியில் வெற்றி பெற்றதால் வெள்ளிப் பதக்கம் கோரியுள்ளார். இதனிடையே, என்னிடம் இனி போராட சக்தியில்லை என்று தெரிவித்த வினேஷ் போகத், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்து நேற்று காலை அதிர்ச்சி அளித்துள்ளார்.
இந்திய வீராங்கணை வெளியேற்றம்
53 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை ஆண்டிம் பங்கல் கலந்து கொண்டார். காலிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை ஜெய்நெப் யெட்கில்லிடம் எதிராக 10-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். அதன் பிறகுதான் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆண்டிம் பங்கல் தனக்கு மட்டுமே அனுமதி உள்ள அங்கீகார அட்டையை தன் சகோதரியிடம் கொடுத்து ஒலிம்பிக் கிராமத்துக்குள் அனுப்பியுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் பிடிபட்டார். அவரை எச்சரிக்கை செய்து பிற்பாடு விட்டனர்.
இதனையடுத்து ஒலிம்பிக் விதிகளை மீறியதாக இந்திய வீராங்கனை ஆண்டிம் பங்கல் மற்றும் அவரது பயிற்சியாளர்கள் அடங்கிய குழுவினருக்கான அங்கீகாரத்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ரத்து செய்தது. இதனால், ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை அடுத்து மத்திய அரசு, பங்கல், அவரது பயிற்சியாளர்கள் அனைவரையும் உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மல்யுத்தம்: அன்ஷு மாலிக் தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனையான அன்ஷு மாலிக் அமெரிக்க வீராங்கனையிடம் தோல்வியைத் தழுவினார். பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக், அமெரிக்க வீராங்கனையான ஹெலனிடம் 2-7 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்று வெளியேறினார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு, பாரீஸ் ஒலிம்பிக்கில் மீண்டும் ஒருமுறை சரித்திரம் படைக்க காத்திருக்கும், நடப்பு சாம்பியனான நீரஜ் சோப்ரா, இன்று அவர் தங்கப் பதக்கம் அல்லது வெள்ளிப்பதக்கத்தை உறுதிசெய்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்திய ஆடவர் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ள இருக்கிறது. 2020 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற 2020 ஆசிய மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட அன்ஷு மாலிக் வெண்கலப் பதக்கங்களில் ஒன்றை வென்றார். செர்பியாவின் பெல்கிரேடில் நடைபெற்ற தனிநபர் மல்யுத்த உலகக் கோப்பையிலும் பெண்கள் 57 கிலோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய மல்யுத்த வெற்றியாளர் போட்டியில் வினேஷ் போகத் மற்றும் திவ்யா கக்ரான் ஆகியோருடன் சேர்ந்து அன்ஷு மாலிக் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் சர்ச்சை வீராங்கணைகள்
பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டையில் 66 கிலோ எடைப் பிரிவில் அல்ஜீரியாவின் இமென் கெலிஃப் - இத்தாலியின் ஏஞ்செலா காரினி சமீபத்தில் மோதினர். மோதல் தொடங்கிய 46 விநாடிகளுக்குள்ளாகவே போட்டியிலிருந்து விலகுவதாக காரினி அறிவித்தார். அத்துடன், களத்திலேயே அவர் முழங்காலிட்டு அழுதார். இதனால் இமென் கெலிஃப் ஊடக வெளிச்சத்துக்கு வந்தார். அவர் மீது ஏற்கனவே இருந்த புகார்களும் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இதேபோல சீன வீராங்கனை லின் யு டிங் பாலின சோதனையில் 2023 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்கள் இருவரும் அவரவர் பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்கள். 66 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதியில் இமென் கெலிஃப் தாய்லாந்து வீராங்கனையுடன் 5-0 என அபார வெற்றி பெற்றார். சீன வீராங்கனை யாங் லியு திபெத் வீராங்கனையுடன் 4-1 என வெற்றி பெற்றார். பாலின சர்ச்சையில் சிக்கிய மற்றுமொரு சீன வீராங்கனையான லின் யு டிங் 57 கிலோ எடைப் பிரிவில் விளையாடுகிறார். அரையிறுதியில் 5-0 என துருக்கி வீராங்கனையை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவருடன் போலந்தின் ஜூலியா மோதுகிறார். இந்த இருவருமே இறுதிப் போட்டியில் வெல்வார்களென எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.
ஆஸ்திரேலியா வரலாற்று சாதனை
33-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸ் நகரில் கடந்த மாதம் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. உலக நாடுகள் பலவற்றைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேச களத்தில் தங்கள் தேசத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களை குவித்து வருகின்றனர். கிரிக்கெட்டுக்கு பெயர்போன ஆஸ்திரேலிய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கிலும் அசத்தி வருகிறார்கள். ஒரே நாளில் 4 தங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்கள்.
5 மணி நேரத்தில் 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்கள். மொத்தமாக 18 தங்கங்களை வென்று ஆஸ்திரேலிய அணி வரலாற்றில் அதிகபட்ச பதங்கங்களை வென்று அசத்தியுள்ளார்கள். 18 தங்கம், 12 வெள்ளி, 11 வெண்கலம் உடன் மொத்தமாக 41 பதங்கங்களுடன் 3ஆவது நிலையில் இருக்கிறார்கள். இதற்கு முன்பாக டோக்கியோ, ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 17 தங்கம் வென்றிருந்தார்கள். முதலிடத்தில் அமெரிக்காவும் 2ஆவது இடத்தில் சீனாவும் இருக்கிறார்கள். இந்திய அணி 67ஆவது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வினேஷ் போகத்துக்கு புகழாரம்
பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் கியூப வீராங்கனையை வீழ்த்தி அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ரண்ட் தங்கம் வென்றார். இந்நிலையில் வினேஷ் போகத் குறித்து தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ரண்ட் மனம்திறந்து பேசியுள்ளார். "வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்ற செய்தியை கேட்டதும் எனக்கு தங்கம் கிடைத்து விட்டது என்று நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நான் இறுதிப்போட்டியில் கியூப வீராங்கனை குஸ்மான் உடன் மொத வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. அப்போது நான் தங்கம் வெல்லவில்லை என்று நினைக்கும் போது எனக்கே விநோதமாக இருந்தது.
உடல் எடையை குறைப்பதில் நானே கைதேர்ந்தவள் தான். அதே சமயம் வினேஷ் போகத்திற்கு நடந்ததை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். அந்த நாள் அவளுக்கு ஒரு அற்புதமான நாளாக இருந்தது. அந்த நாளில் அவள் ஒரு பைத்தியக்காரத்தனமான சாதனையை செய்திருந்தாள். ஆனால் அவளின் ஒலிம்பிக் பயணம் இப்படி முடியும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நான் அவளை நினைத்து அனுதாபப்படுகிறேன். நிச்சயமாக, அவள் ஒரு அற்புதமான போட்டியாளர், ஒரு அற்புதமான மல்யுத்த வீரர் மற்றும் நபர் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
ஜோதி யார்ராஜி வெளியேற்றம்
மகளிருக்கான 100மீ தடை ஓட்டப் போட்டியில் 2-வது வாய்ப்பில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி 4-வது இடம் பிடித்து அரையிறுதி போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறினார். ஏற்கனவே முதல் சுற்றான ஹீட் பிரிவில் 7-வது இடம் பிடித்த நிலையில், அடுத்து சுற்றுக்கு முன்னேற கிடைத்த 2-வது வாய்ப்பில் 13.17 வினாடிகளில் இலக்கை கடந்து 4-வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
இதற்கு முன்னதாக ஆண்களுக்கான 3000-மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தடகள வீரர் அபினாஷ் சேபிள் ஹீட் போட்டியில் 5-வது இடம் பிடித்திருந்த நிலையில் இறுதிப் போட்டியில் 8:14:18 வினாடிகளில் இலக்கை கடந்து 11-வது இடம் பிடித்து வெளியேறினார். இந்த தொடரில் தோல்வி அடைந்து அவர் வெளியேறியிருந்தாலும், வரும் 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அவினாஷ் சேபிள் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
நீச்சல் வீராங்கனை வெளியேற்றம்
பராகுவே நாட்டைச் சேர்ந்த லுவானா அலோன்சோ என்ற நீச்சல் போட்டியில் பங்கேற்றார். இவர் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில், நீச்சல் வீராங்கனை அலோன்சோ ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேறி நாடு திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர் தொடர்ந்து ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருப்பது வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் பாதிப்பையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்துவதாகவும், சக வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.
ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் ஒலிம்பிக் தொடரின் கடைசிநாள் விழா வரை வீரர்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவது வழக்கமாகும். நாடு திரும்பிய நிலையில், பராகுவே வீராங்கனை அலோன்சா நீச்சலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒலிம்பிக் கிராமத்தில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முடிவை திரும்பப்பெற கோரிக்கை
“மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய உத்வேகம் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001 - 2024 மல்யுத்தத்துக்கு குட் பை” என்று தனது ஓய்வை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார் வினேஷ் போகத். இந்த நிலையில்தான், வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்ப பெறவேண்டும் என்று அவரது நெருங்கிய உறவினரும், சிறு வயது பயிற்சியாளருமான மஹாவீர் போகத் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள மஹாவீர் போகத், “அதிகாலை தான் ஓய்வு பற்றி வினேஷ் போகத் தெரிவித்தார். இவ்வளவு நெருங்கிவந்து பதக்கத்தை இழந்ததால் உண்டான மனநிலை காரணமாக ஓய்வு முடிவை அவர் எடுத்திருக்கலாம். யாராக இருந்தாலும், பதக்கம் வெல்வதற்கு இவ்வளவு நெருக்கமாக வந்தபிறகு இப்படியோரு நிலை வந்தால், கோபத்தால் இப்படிப்பட்ட முடிவைத்தான் எடுப்பார்கள். அதேபோல் தான் வினேஷ் போகத்தும் ஏமாற்றத்தால் ஓய்வு அறிவித்துள்ளார். ஆனால், அவர் ஓய்வு பெறக்கூடாது. வினேஷ் தனது ஓய்வு முடிவை திரும்ப பெறவேண்டும். அவரை நேரில் சந்தித்த பிறகு, வினேஷை உட்காரவைத்து இந்த முடிவை மாற்றிக் கொண்டு கடுமையாக உழைக்கச் சொல்லி வலியுறுத்துவேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: த.வெ.க. சார்பிலான ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
02 Jul 2025சென்னை : காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், த.வெ.க.
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
சீமான் மீதான டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
02 Jul 2025மதுரை : சீமான் மீது டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: இமாச்சலப்பிரதேசத்தில் 10 பேர் பலி
02 Jul 2025சிம்லா : இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காண
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
புதிய வாரிசை அறிவிக்க தலாய் லாமா மறுப்பு? - தேர்ந்தெடுக்க அறக்கட்டளைக்கு அதிகாரம்
02 Jul 2025கான்பெரா : தற்போதைய 14வது தலாய் லாமா, புதிய வாரிசை அறிவிக்க மறுத்துவிட்டார். புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க திபெத் அறக்கட்டளைக்கு அதிகாரம் அளித்தார்.
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது 500 சதவீதம் வரி? - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
02 Jul 2025வாஷிங்டன் : ரஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் காவல் தனிப்படைகள் கலைப்பு : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு
02 Jul 2025சென்னை : தமிழகம் முழுவதும் மாவட்டம், மாநகரங்களில் செயல்பட்டு வந்த அங்கீகரிக்கப்படாத போலீஸ் தனிப்படைகளை கலைத்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
2 மடங்கு கட்டணம் வசூலிக்க ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய அனுமதி
02 Jul 2025புதுடெல்லி : ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு
02 Jul 2025நாமக்கல் : பெண் சிறப்பு சப்/ இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
-
தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: உயர் நீதிமன்றம்
02 Jul 2025சென்னை : குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனி நபரின் உரையாடலை ஒட்டுக் கேட்பதை அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.