முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் இணைப்பு உடைந்ததால் 2-ஆக பிரிந்த மகத் எக்ஸ்பிரஸ் ரயில்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      இந்தியா
Magadh-Express 2024-09-08

Source: provided

பாட்னா : டெல்லியில் இருந்து இஸ்லாம்பூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்த மகத் விரைவு ரயிலின் இணைப்பு உடைந்ததால் ரயில் இரண்டாக பிரிந்ததாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தின் திவினிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூருக்கு இடையே காலை 11.08 மணிக்கு இந்த விபத்து நடந்ததாகவும், அதில் யாரும் காயமடையவில்லை என்றும் தெரிவித்தனர்.  இந்த விபத்து குறித்து கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி சரஸ்வதி சந்திரா கூறியதாவது: 

டெல்லியில் இருந்து இஸ்லாம்பூருக்கு சென்று கொண்டிருந்த மகத் விரைவு வண்டியின் இணைப்பு உடைந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதனால், திவினிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூருக்கு இடையே ரயில் இரண்டாகப் பிரிந்தது. ரயில் திவினிகஞ்ச் ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ரயில் என்ஜினில் இருந்து 13 மற்றும் 14-வதாக இருந்த எஸ்-6, எஸ்-7 இடையேயான இணைப்புகள் உடைந்து ரயில் இரண்டாக பிரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், மீட்பு மற்றும் தொழில்நுட்ப குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிக்கலை சரி செய்தனர். இதனால் டவுன் லைனில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது  என்று தெரிவித்தார். மேலும் எதனால் இந்த சம்பவம் நடைபெற்றது என்ற அறிய உத்தரவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து