முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிம்மதியாக இருக்கிறேன்: கீமோதெரபி சிகிச்சையை முடித்த இளவரசி கேட் மிடில்டன் மகிழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      உலகம்
Kate-Middleton 2024-09-10

லண்டன், பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், தனது கீமோதெரபி சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து விட்டேன் என சந்தோஷமாக தெரிவித்தார்.

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மகன் வில்லியமன் மனைவி கேட் மிடில்டன். புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தது அரசு குடும்பத்தினரை கவலை அடைய செய்தது. கடந்த ஜனவரியில் இரு வாரம் மருத்துவமனையில் கேட் மிடில்டன் அனுமதிக்கப்பட்டிருந்த போது புற்றுநோய் பாதிப்பு தெரியவந்தது கீமோதெரபி அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இளவரசி கேட் மிடில்டன், தனது கீமோதெரபி சிகிச்சையை முடித்து விட்டதாகவும், இந்த ஆண்டு முழுவதும் பொது பணிகளில் ஈடுபட உள்ளேன் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இளவரசி கேட் கூறியிருப்பதாவது, 

கடந்த ஒன்பது மாதங்கள் ஒரு குடும்பமாக எங்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருந்தது. கோடைக்காலம் முடிவடையும் நிலையில் இறுதியாக எனது கீமோதெரபி சிகிச்சையை முடித்ததில் நிம்மதி கிடைத்து விட்டது. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கிடைத்த ஆதரவிற்கு நன்றி. புற்றுநோய் பயணம் சிக்கலானது. பயமுறுத்தும் மற்றும் கணிக்க முடியாதது. நான் மீண்டும் வேலைக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

மேலும் வரும் மாதங்களில் என்னால் முடிந்தால் இன்னும் சில பொது பணிகளை மேற்கொள்வதற்காக காத்திருக்கிறேன். இந்த நேரத்தில் எங்களுக்கு உதவி செய்யும் அனைவரிடமிருந்தும் பெரும் பலத்தைப் பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இளவரசி கேட், ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரது உடல்நிலை நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கேட், இளவரசர் வில்லியம் தோளில் சாய்ந்திருப்பதும், பின்னர் வில்லியமுடன் சிரித்து மகிழ்வதும், கைகள் கோர்ப்பதும், பின்னர் முத்தமிட்டுக் கொள்வதும் அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து