முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்திக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள்: பா.ஜ.க. தலைவர்கள் மீது போலீசில் காங்கிரஸ் புகார்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      இந்தியா
Ajay-Makan 2024-03-18

புது டெல்லி, ராகுல் காந்தி  குறித்து வெறுக்கத்தக்க வகையில் பேசியதாக பா.ஜ.க. தலைவர்கள் மீது டெல்லி தவுலக் ரோடு காவல் நிலையத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் புகார் அளித்துள்ளார். 

 சமீபத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர்  ராகுல் காந்தி தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது மத்திய அரசையும், பா.ஜ.க.வையும் தாக்கி அவர் பேசியது சர்ச்சையானது. இதற்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். 

இவ்வாறு விமர்சனம் செய்தவர்களில் ராகுல் காந்திக்கு எதிரான வெறுக்கத்தக்க வகையிலும், அச்சுறுத்தும் தொனியிலும் பேசியதாக பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய தலைவர்களான தர்வீந்தர் சிங் மர்வா, ரகுராஜ் சிங், ரன்வீத் பிட்டு (மத்திய ரெயில்வே இணை அமைச்சர்) மற்றும் சிவ சேனா கட்சியின் எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் ஆகியோர் மீது டெல்லி தவுலக் ரோடு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் இந்த புகாரை அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் 4 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.)  பதிவு செய்ய வேண்டும் என அஜய் மக்கான் கூறி உள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், 

நாட்டின் எதிர்க்கட்சி தலைவரை பயங்கரவாதி என்று அழைப்பது, அவர் மீது பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தனிப்பட்ட வெறுப்பையே காட்டுகிறது. மக்களிடையே கலவரத்தைத் தூண்டி அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு பேசுகிறார்கள். இவ்வாறு ராகுல் காந்திக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசும் அளவிற்கு இந்திய அரசியல் தரம் தாழ்ந்து விட்டது என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து