முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடியார் ஆட்சியில் ராக்கெட் வேகத்தில் செயல்பட்ட தமிழக சுகாதாரத்துறை தற்போது ஆமை வேகத்தில் செயல்படுகிறது : மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      தமிழகம்
Saravanan 2024-05-10

Source: provided

மதுரை : எடப்பாடியார் ஆட்சியில் ராக்கெட் வேகத்தில் செயல்பட்ட தமிழக சுகாதாரத்துறை தற்போது ஆமை வேகத்தில் செயல்படுகிறது என்று அ.தி.மு.க. மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டியுள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க.மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது- தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ,38 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 256 தாலுகா மற்றும் தாலுகா சாரா மருத்துவமனைகள், 1832 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8713 துணை சுகாதார நிலையங்கள், 487 நகர்ப்புற ஆரம்ப சுகா நிலையங்கள் உள்ளது.

குறிப்பாக எடப்பாடியார் ஆட்சியில் தான் சுகாதாரத் துறையில் பல்வேறு தரங்கள் உயர்த்தப்பட்டது மதுரையில் 150 கோடி மதிப்பில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் அதன் மூலம் கூடுதலாக 1700 மருத்துவ இடங்கள்,  313 கோடியில் ராஜாஜி மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் போன்ற உருவாக்கப்பட்டது.

இதற்கெல்லாம் மேலாக மருத்துவர்கள், செவிலியர்கள் ,உதவியாளர்கள் உள்ளிட்ட என 31,250 பல்வேறு மருத்துவ காலி காலியிடங்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால் இன்றைக்கு அரசு மருத்துவமனைகளில் 6,900 மேற்பட்ட மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செவிலியர்கள், உதவியாளர்கள் என ஏறத்தாழ 32,000 மருத்துவ காலி பணியிடங்கள் உள்ளது.  மகப்பேறு மருத்துவர்கள் கடும் பற்றாக்குறை உள்ளதால் தஞ்சை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மகப்பேறு இறப்பு அதிகரித்து வருகிறது.

அதேபோல் மருத்துவக் கல்லூரி இயக்கத்தில் 2023 ஆண்டுகான இணை பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.அதேபோல் 2024 ஆண்டுக்கான இயக்குனர், பேராசிரியர்,இணைப் பேராசிரியர் உயர்வு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை குறிப்பாக பேராசிரியர்கள், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் என 2500 பதவி காலியாக உள்ளது.தொடர்ந்து எடப்பாடியார் தினந்தோறும் சுகாதார துறையின் அவல நிலை குறித்து தோலுறுத்தி காட்டு வருகிறார். 

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது என்று எடப்பாடியார் கூறினார்.உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் அதுபோன்று இல்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தார்.கத்திரிக்காய் முத்தினால் வீதிக்கு வந்திருக்கும் என்பதை போல இன்றைக்கு தென்காசியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு ஒருவர் எக்ஸ்ரே எடுத்ததற்கு அதற்கு எக்ஸ்ரே பிலிம் இல்லாமல் பேப்பரில் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்துள்ளனர். இன்றைக்கு மக்களுக்கு உண்மையாக உழைக்காமல் ஒரு ஜெராக்ஸ் அரசாங்க உள்ளது என்பது இதுவே சாட்சி. இனியும் மக்களை ஏமாற்ற முடியாது  எடப்பாடியார் ஆட்சி காலத்தில் ராக்கெட் வேகத்தில் செயல்பட்ட சுகாதாரதுறை தற்போது ஆமை வேகத்தில் உள்ளது.இதற்கெல்லாம் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து