முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேசத்தில் இந்திய உளவாளி எனக்கூறி பத்திரிகையாளர் முற்றுகை

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      இந்தியா
Munni-Saha 2024-12-02

Source: provided

 

டாக்கா:வங்கதேசத்தில் மூத்த பெண் பத்திரிகையாளர் முன்னி சாஹாவை இந்தியாவின் உளவாளி எனக் கூறி கும்பல் ஒன்று முற்றுகையிட்டது. பின்பு அவர் போலீஸாரால் மீட்கப்பட்டார்.

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் கர்வான் பஜார் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தான் வேலைபார்க்கும் தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்து முன்னி சாஹா வெளியேறிய போது கும்பல் ஒன்று அவரைச் சூழ்ந்து முற்றுகையிட்டது. சாஹா ஒரு இந்திய முகவர் என்றும் ஆகஸ்ட் மாதம் நடந்த மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதாரவாளர் என்றும் குற்றம்சாட்டியது.

உள்ளூர் ஊடகங்களின் அறிக்கையின் படி, “சாஹாவின் காரினை வழிமறித்த கும்பல் ஒன்று அவருக்கு எதிராக கோஷம், அவதூறு வார்த்தகைளை முழங்கினர். இதனைத் தொடர்ந்து டாக்கா நகர போலீசார் அவரை மீட்டுச் சென்றனர். டாக்கா நகர புலனாய்வு கிளைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு, தேஜ்கான் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு என்ற ஊகத்தை கிளப்பியது. என்றாலும் மூத்த பத்திரிகையாளர் காவலில் வைக்கப்படவில்லை என்றும் ஞாயிற்றுக்கிழமை காலையில் அவர் விடுவிக்கப்பட்டார் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து