முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மர்ம நோய்க்கு 16 பேர் உயிரிழப்பு: காஷ்மீரில் மத்தியக்குழு ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      இந்தியா
Kashmir 2025-01-19

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பரவும் மர்ம நோய்க்கு 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு மத்திய குழுவினர் நேரில் ஆய்வு நடத்தினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டம், பதால் கிராமத்தில் பரவி வரும் மர்ம நோய் கடந்த 45 நாட்களில் 16 பேரின் உயிரை பறித்துள்ளது. இந்த மர்ம நோய்க்கு ஆளானவர்களுக்கு காய்ச்சல், வலி, குமட்டல் மற்றும் சுயநினைவை இழத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 7 அன்று நடந்த ஒரு விருந்துக்கு பிறகு ஏழு பேர் கொண்ட ஒரு குடும்பம் நோய்வாய்ப்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

சில நாட்களுக்குப் பிறகு, 9 பேர் கொண்ட மற்றொரு குடும்பம் இதே போன்ற அறிகுறிகளுடன் நோய்வாய்பட்டது. அதில் மூன்று பேர் இறந்தனர். ஜனவரி 12 அன்று, பத்து பேர் கொண்ட மூன்றாவது குடும்பம் நோய்வாய்ப்பட்டது. இந்த குடுப்பத்தில் ஐந்து குழந்தைகள் இறந்தனர் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

இந்நிலையில் நோயின் காரணத்தை கண்டறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைச்சர்கள் மட்டத்தில் குழு ஒன்றை அமைத்துள்ளார். அந்த குழு நேற்று பாதிப்பு குறித்து அப்பகுதியில் ஆய்வு செய்தது. தொற்று வியாதிக்கான சாத்தியம் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயிரிழப்புகள் நியூரோ டாக்சின்களால் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து