முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் ரூ.71 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      தமிழகம்
Havala 2025-03-21

Source: provided

கோவை : கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஹவாலா  பணம் ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் போதை தடுப்பு பிரிவு போலீசார் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஆந்திரத்தில் இருந்து கொச்சி சென்ற சிவப்பிரகாஷ் பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது, தலா ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்தது தெரிய வந்தது. அவா் வைத்திருந்த பணத்துக்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. மேலும், முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்ததால் சிவப்பிரகாஷை காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். அங்கு நடத்திய விசாரணையில், ஆந்திரத்தில் இருந்து கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட ஹவாலா பணம் எனத் தெரிய வந்தது.

இதுகுறித்து கோவை வருமான வரித் துறை அலுவலா்களுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா். வருமான வரித் துறை அலுவலா்களிடம் சிவப்பிரகாஷையும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் ஹவாலா பணத்தையும் போலீஸாா் ஒப்படைத்தனா். இதையடுத்து ஆந்திரத்தில் அவரிடம் பணத்தைக் கொடுத்தனுப்பிய நபா் யாா், கொச்சியில் பணத்தை வாங்கிச் செல்ல இருந்தவா் யாா், எங்கிருந்து ஹவாலா பணம் அனுப்பப்பட்டது போன்றவை குறித்து வருமான வரித் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து