Idhayam Matrimony

துருக்கியில் எதிர்க்கட்சி தலைவர் கைது

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      உலகம்
Imamoglu-2025-03-22

இஸ்தான்புல், துருக்கியில் பயங்கரவாத வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2014 ஆண்டு முதல் துருக்கி அதிபராக தாயூப் எர்டோகன் செயல்பட்டு வருகிறார். நீதி மற்றும் வளர்ச்சி கட்சியை சேர்ந்த எர்டோகன் 1994 முதல் 1998 வரை இஸ்தான்புல் மேயராக செயல்பட்டுள்ளார். மேலும், 2003 முதல் 2014 வரை துருக்கி பிரதமராகவும் செயல்பட்டுள்ளார்.

இதனிடையே, எர்டோகன் சர்வாதிகாரிபோல் செயல்படுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. மேலும், துருக்கியில் எதிர்க்கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் நடவடிக்கையில் எர்டோகன் ஈடுபட்டு வருகிறார். அதேவேளை, துருக்கி எதிர்க்கட்சியான ஜனநாயக மக்கள் கட்சியின் முக்கிய தலைவராக எக்ரிம் இமாமொக்லு திகழ்கிறார். இவர் இஸ்தான்புல் மேயராக செயல்பட்டு வருகிறார்.

2028ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் எர்டோகனை வீழ்த்தி எக்ரிம் இமாமொக்லு வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளாராக இமாமொக்லு நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இமாமொக்லுவை கடந்த புதன்கிழமை போலீசார் கைது செய்தனர். ஊழல் , பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக இமாமொக்லு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து