முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 பொதுத்தேர்வில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் தேர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, தமிழ்நாட்டில் பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதி செய்து வருகிறோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 96 சதவிகிதத்தை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்.,

கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி இது. பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர் கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருகிறோம்.தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக நமது திராவிட மாடல் அரசு தீட்டும் திட்டங்களால் வரலாற்றில் இடம்பெறும் என்று அவர் கூறியுள்ளார்.

 அவர் வெளியிட்டுள்ள மற்றோரு சமூக வலைதளப் பதிவில், ‘10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துகள். இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெறுங்கள்; கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்!’ எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து