முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பு ஐ.பி.எல். தோனியுடன் உத்வேகமூட்டும் பயணமாக அமைந்தது: உர்வில் படேல்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூன் 2025      விளையாட்டு
Dhoni 2024-03-12

Source: provided

மும்பை : சிறந்த தலைவன், அதைவிடவும் சிறந்த மனிதரான அவருடன் உத்வேகமூட்டும் பயணமாக அமைந்தது என தோனி குறித்து  இளம் சி.எஸ்.கே. வீரர் உர்வில் படேல் கூறியுள்ளார்.

புதிய வீரர்கள்... 

2025 ஐ.பி.எல். சீசன் சி.எஸ்.கே. அணிக்கு மோசமாக அமைந்தாலும் சில புதிய வீரர்கள் வருகை ஆறுதல் அளித்துள்ளது. அந்த வகையில் வன்ஷ் பேடிக்கு மாற்றாக ரூ.30 லட்சத்துக்கு சி.எஸ்.கே. அணியில் வாங்கப்பட்டார். குஜராத்தைச் சேர்ந்த 26 வயதாகும் உர்வில் படேல் 3 ஐ.பி.எல். போட்டிகளில் 212.30 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார்.

நம்பமுடியாத வாய்ப்பு...

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் தோனி குறித்து கூறியதாவது: எம்.எஸ்.தோனி தலைமையில் விளையாடும் நம்பமுடியாத வாய்ப்பு எனக்கு கிடைத்ததுக்கு மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டு உள்ளேன். ’தல’ உடன் களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் அமைதி, தலைமைப் பண்பு, தன்னடக்கம் என எல்லாமே மாஸ்டர்கிளாஸாக இருந்தன. ஏற்கனவே, அவருடன் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவரது வழிகாட்டுதலில் வளர ஆசைப்படுகிறேன். ஓய்வறை, களத்தில் அவருக்கு அருகில் இருந்த ஒவ்வொரு நொடியும் கனவு நனவானது போல் இருந்தது. கூடுதல் சிறப்பானது என்னவென்றால் இதையெல்லாம் எனது குடும்பமும் அங்கிருந்து அனுபவித்தார்கள். மறக்க முடியாத கணங்கள்.

தலைசிறந்த மனிதன்...

தோனி என்னுடைய சீருடையில் ’சிறப்பான வாழ்த்துகள் உர்வில்’ என எழுதிக் கொடுத்தது எப்போதும் பிரேம் போட்டு வைத்துக் கொள்வேன். சிறந்த தலைவன், அதைவிடவும் சிறந்த மனிதரான அவருடன் உத்வேகமூட்டும் பயணமாக அமைந்தது எனக் கூறியுள்ளார். முதல் தரப் போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்தியர், சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிவேக சதம் அடித்தவர் என அசத்திய உர்வில் படேல் 40 பந்துகளுக்குக் குறைவாக 2 சதங்கள் விளாசியவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியது கவனிக்கத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து