முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: காசாவில் 30 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூன் 2025      உலகம்
Gaza 2024-04-15

Source: provided

ஜெருசலேம் : காசாவில் உதவி மையம் அருகே இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 115 பேர் பலத்த காயமடைந்தனர்.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா நீண்ட முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் காசாவில் அமெரிக்கா நிதியுதவி இயங்கி வரும் உதவி மையம் அருகே இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 115 பேர் பலத்த காயமடைந்தனர்.  காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்தவர்களின் உடலை மீட்கும் பணி நடந்து வருகிறது. “ போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து ஒரு நிலையில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல் படுகொலை' என ஹமாஸ் படையினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து