முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.500 நோட்டுகள் செல்லாதா? - மத்திய அரசு விளக்கம்

சனிக்கிழமை, 7 ஜூன் 2025      இந்தியா
Rooupes 2024-05-31

Source: provided

புதுடில்லி : மார்ச் 2026க்குள் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் 'கேபிடல் டிவி' என்ற யூடியூப் சேனலில் வெளியான ஒரு வீடியோ, ரூ.500 நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் எனக் கூறி, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ 4.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற நிலையில், பத்திரிகை தகவல் பணியகம் உண்மைச் சரிபார்ப்புத் துறை இந்த வதந்தியில் எந்த உண்மையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், இந்த நோட்டுகள் நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட  சுற்றறிக்கையில்,ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளின் புழக்கத்தை ஏ.டி.எம்.கள் மூலம் அதிகரிக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இது ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறுவதுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், சிறிய மதிப்புள்ள நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரசு விளக்கமளித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து