முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு: வதந்தி என்கிறார் ராமதாஸ்

வியாழக்கிழமை, 3 ஜூலை 2025      தமிழகம்
Ramadoss 2023-07-28

Source: provided

விழுப்புரம்: தி.மு.க.மற்றும் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி பேசி வருவதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் வதந்தி தான் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “நகை திருட்டு புகாரில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். அஜித்குமார் மீது புகாரளித்த  நிகிதாவின் ஒரு போன் காலுக்கு இவ்வளவு செல்வாக்கு வந்தது எப்படி?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ம.க.வில் இருந்து சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பா.ம.க.வில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது.  ஜி.கே.மணி மூலம் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து தான் அருளை பதவியிலிருந்து நீக்க முடியும். முதலில் நான் இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். எனவே அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு.  

இப்போது என் மனம் வேதனைப்படும் அளவு நடக்கின்றனர், எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு கட்சியை நடத்தி வருகிறேன். கட்சியை தொடந்து நானே வழிநடத்துவேன்.  தி.மு.க.மற்றும் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி பேசி வருவதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் வதந்தி தான். செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழுவை கூட்டி எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். ஆகஸ்டு 10-ம் தேதி பூம்புகாரில் மகளிர் மாநாடு நடத்தவுள்ளோம். ஜூலை 10-ம் தேதி மாநாடு நடக்கும் இடத்தை பார்வையிட செல்கிறேன். இது ஒட்டுமொத்த மகளிர் மாநாடு, எனவே அனைத்துக்கட்சியை சேர்ந்த மகளிரும் பங்கேற்கலாம். அன்புமணி தொடர்பான கேள்விகளை என்னிடம் தவிர்க்க வேண்டுகிறேன்” எனத் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து