முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸில் தோற்பது குறித்து கவலை இல்லை: கேப்டன் ஷுப்மன் கில்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      விளையாட்டு
31-Ram-56

Source: provided

லண்டன்: நாங்கள் போட்டியில் வெல்லும்வரை டாஸில் தோற்பதை பெரிதாக கண்டுக்கொள்ள மாட்டோம் என்று இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

போட்டி தாமதம்...

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூலை 31) துவங்கியது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சிறிது நேரம் மழை பெய்ந்ததால் போட்டி தாமதமானது.

டாஸ் வென்ற இங்கி...

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் டாஸ் வென்றதும் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார். இந்தத் தொடரில் 2-1 இங்கிலாந்து முன்னிலை வகிக்க, இந்தப் போட்டியில் இந்தியா வென்று சமனில் முடிக்க முனைப்பில் இருக்கிறது.

கண்டுக்கொள்ளவில்லை...

தொடர்ச்சியாக டாஸில் தோற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியதாவது:  நாங்கள் போட்டியில் வெல்லும்வரை டாஸில் தோற்பதை பெரிதாக கண்டுக்கொள்ள மாட்டோம்.  நேற்று பிளேயிங் லெவன் குறித்து அதிகமாக சிந்தித்தேன். மேகமூட்டமாக இருப்பதால் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்குமென நினைக்கிறேன்.

மாற்றங்கள்...

முதல் இன்னிங்ஸில் ரன்கள் குவிக்க நினைக்கிறோம். அணியில் 3 மாற்றங்களை செய்திருக்கிறோம். ரிஷப் பந்த், ஷர்துல் தாக்குர், பும்ராவுக்குப் பதிலாக ஜுரெல், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார்கள். விளையாடும் எல்லா போட்டிகளையும் வெல்ல நினைக்கிறோம். அருகில் வருகிறோம். இன்னும் 5-10 சதவிகிதம் கூடுதலாக உழைத்தால் வெற்றி பெறுவோம். அதை வீரர்கள் அளிப்பார்கள் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து