முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓவல் கடைசி டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதான ஆட்டம்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      விளையாட்டு
31-Ram-55

Source: provided

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

போட்டி தாமதம்...

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூலை 31) துவங்கியது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சிறிது நேரம் மழை பெய்ந்ததால் போட்டி தாமதமானது.

பொறுப்பு கேப்டன் போப்...

பின்னர், மழை நின்றவுடன் போட்டி துவங்கியது. இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகியதால், அவருக்குப் பதிலாகப் பொறுப்பு கேப்டன் ஆலி போப் கேப்டன் பதவியை நிர்வகிக்கிறார். இங்கிலாந்து அணி டாஸ் வென்றதும் பொறுப்பு கேப்டன் ஆலி போப் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார்.

டாஸ்ஸில் தோல்வி...

இந்தத் தொடரில் மொத்தமுள்ள 5 போட்டிகளிலுமே இந்திய டாஸ்ஸில் தோல்வியடைந்துள்ளது. மேலும், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 15 டாஸ் தோல்வி இதுவாகும்.

அதிரடி நீக்கம்...

இங்கிலாந்து அணியில் லியாம் டாஸன், ஜோஃப்ரா ஆர்ச்சர், கார்ஸ், காயமடைந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நால்வரும் நீக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா, கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சரியாக சோபிக்காத அன்ஷுல் காம்போஜ், காயமடைந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ஷர்துல் தாக்குர் உள்ளிட்ட நல்வர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கருண் நாயர் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடக்க வீரர்கள் ஏமாற்றம்...

 ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஓவல் சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்தனர். இதனால் ஜெய்ஸ்வால் பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்டார். அவர் 2 ரன்கள் எடுத்த நிலையில் அட்கின்சன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்த கே.எல். ராகுல் உடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் ஸ்விங் பந்தை திறமையாக எதிர்கொண்டு விளையாடினர். என்றாலும், கிறிஸ் வோக்ஸ் வீசிய 16ஆவது ஓவரில் கே.எல். ராகுல் இன்சைடு எட்ஜ் மூலம் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

இந்தியா 72/2... 

அப்போது இந்தியா 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. 4ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்துள்ளார். இருவரும் நேர்த்தியாக பந்தை எதிர்கொண்டு ரன்கள் சேர்த்து வந்தனர். இந்திய அணி 23 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. அத்துடன் முதல்நாள் உணவு இடைவேளை விடப்பட்டது. சாய் சுதர்சன் 23 ரன்களுடனும், சுப்மன் கில் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து