முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      இந்தியா
court 2024-12-30

Source: provided

திருவனந்தபுரம்: பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் ராப் பாடகர் வேடன். வேற்றுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பாடி வருவதால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. சுயாதீன பாடகராக மட்டமல்லாமல் திரைப்படங்களிலும் பாடி வருகிறார்.

இந்த நிலையில், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வேடன் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் மருத்துவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான வேடன் கடந்த 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரை தன்னிடம் அடிக்கடி பணம் பெற்றதுடன் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார் எனத் தெரிவித்துள்ளார்.

இப்புகார் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் துவங்கியுள்ளனர். சில மாதங்களுக்கு முன் வேடன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி விடுதலையானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து