முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவினின் பெற்றோரை சந்தித்து கனிமொழி எம்.பி. ஆறுதல்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      தமிழகம்
31 Ram 71

Source: provided

தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட கவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி எம்.பி, ஆணவக் கொலை தொடர்பாக சட்டம் நிறைவேற்றப்படும் என நம்புவதாக கூறியுள்ளார்.

ஆறுமுகமங்கலம் பகுதியில் உள்ள கவினின் வீட்டிற்கு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி, நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும், குற்றம் செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது கனிமொழியிடம், சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என கவினின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், கொலை நடந்த இடத்தின் 2 கேமரா காட்சிகளை மட்டுமே போலீசார் தங்களிடம் காட்டியதாகவும், இந்த கொலைக்கு முழுக்க முழுக்க குற்றவாளியின் பெற்றோர்தான் காரணம் என்றும் கூறினர். குறிப்பாக, குற்றம் நடந்த நாளில் காவல் நிலையத்தில் தங்களை கடுமையாக அலைகழித்ததாகவும், தங்களை தனியாக ஒரு அறையில் அடைத்து வைத்ததாகவும் கவினின் தாயார் குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி, “இப்படிப்பட்ட கொலைகள், குறிப்பாக ஆணவக் கொலைகள் நடக்கக் கூடாது என்பது தான் இந்த சமூகத்தின் உணர்வாக இருக்கிறது. இப்படியொரு நிகழ்வு நடந்திருக்கக் கூடாது. தங்களது இளம் மகனை இழந்த தவிப்பில் உள்ள பெற்றோருக்கு ஆதரவாக நிற்கிறோம். முதலமைச்சர் சார்பில் அமைச்சர்களும், நானும் இங்கு வந்திருக்கிறோம்.

கவினின் பெற்றோருக்கு நியாயம் கிடைக்க தமிழக அரசு நிச்சயம் உறுதுணையாக நிற்கும். அந்த நம்பிக்கையை தருவதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்தோம். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காகத்தான் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் யார் யார் தவறு செய்திருக்கிறார்களோ, அத்தனை பேர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஆணவ கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயக்குவது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “இது நாடு தழுவிய பிரச்சினையாக இருக்கிறது. இது குறித்து நானும், திருமாவளவனும் நாடாளுமன்றத்தில் பல முறை பேசியிருக்கிறோம். குறிப்பாக, நேற்று திருமாவளவன் அங்குள்ள அமைச்சர்களை சந்தித்து இது குறித்து கோரிக்கை வைத்திருக்கிறார். விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து