Idhayam Matrimony

சிராஜ் போன்ற போராளிக்கு எதிராக விளையாடுவதை விரும்புகிறேன் ஜோ ரூட் பெருமிதம்

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
0

Source: provided

ஓவல்: சிராஜ் போன்ற போராளிக்கு எதிராக விளையாடுவதை விரும்புகிறேன் என்று இங்கிலாந்து அணி வீரர்  ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

ஓவலில்...

இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

35 ரன்கள்... 

23 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆடிய இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற 35 ரன்கள் தேவை. இந்திய அணிக்கு 4 விக்கெட்டுகள் தேவை.

23 விக்கெட்...

இந்த பரபரப்பான சூழ்நிலையில் 5வது நாள் ஆட்டம் நேற்று நடக்கிறது. முன்னதாக இத்தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். கடைசி போட்டியில் தடுமாற்றமாக பவுலிங் செய்து வெளியேறினார். ஆனால் முகமது சிராஜ் முழுமையாக 5 போட்டிகளிலும் விளையாடி 23 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தம்முடைய உடலைப் பற்றி பொருட்படுத்தாமல் இந்தியாவுக்காக முழு இதயத்துடன் விளையாடும் அவர் இத்தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார். 

போராளி...

இந்நிலையில் முகமது சிராஜ் இந்திய அணியின் வெற்றிக்காக போராடும் உண்மையான போராளி என்று இங்கிலாந்தின் ஜோ ரூட் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சிராஜ் ஒரு போராளி. உண்மையான போராளியைப் போன்ற குணத்தைக் கொண்டவர். அவர் நீங்கள் உங்களுடைய அணியில் இருக்க விரும்பக்கூடிய ஒருவரைப் போன்ற குணத்தைக் கொண்டவர். அவர் இந்தியாவுக்காக தன்னுடைய அனைத்தையும் கொடுக்கிறார். அதற்காக அவரை பாராட்ட வேண்டும்.

கடினமானவர்...

அவர் கிரிக்கெட்டை அணுகும் விதம், சில நேரங்களில் பொய்யான கோபத்தைக் காட்டும் விதம் ஆகியவற்றைப் பார்க்கிறேன். இருப்பினும் அவர் மிகவும் நல்லவர் என்று உங்களால் சொல்ல முடியும். மிகவும் திறனுள்ள வீரரான அவர் எதிர்கொள்வதற்கு கடினமானவர். அவர் இவ்வளவு விக்கெட்டுகளை எடுக்க 2 காரணம் இருக்கிறது.

விரும்புகிறேன்...

ஒன்று வேலை நெறிமுறை, மற்றொன்று அவருடைய திறன் அளவு. முகத்தில் பெரிய புன்னகையுடன் தன்னுடைய அணிக்காக அனைத்தையும் கொடுக்கும் சிராஜ் போன்றவருக்கு எதிராக நான் விளையாடுவதை விரும்புகிறேன். ஒரு ரசிகன் பார்ப்பது போன்று எதையும் உண்மையில் விரும்பவில்லை. எந்த இளம் வீரருக்கும் அது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து