முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகண்ட் நிலச்சரிவில் 150 பேர் உயிருடன் மீட்பு 11 ராணுவ வீரர்கள் மாயம்

புதன்கிழமை, 6 ஆகஸ்ட் 2025      இந்தியா
Uttarakhand 2025-06-29

Source: provided

உத்தரகண்ட்: உத்தரகண்டின் உத்தரகாசியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 150 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 11 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர் என தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

உத்தரகாசியில் ஆகஸ்ட் 5ஆம் தேதி மேகவெடிப்பால் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தராலி கிராமம் நிலச்சரிவில் புதைந்தது. இந்த இயற்கை சீற்றத்தால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதிலும், மண்ணுக்கள் புதைந்ததிலும் இதுவரை 4 போ் உயிரிழந்ததாகவும், 70க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 15 பாதுகாப்புப் படை வீரா்களும் அடங்குவா்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையிலும், தொடர் கனமழை பெய்து வருவதாலும் பிரயாக்ராஜ், அயோத்தி வாரணாசி ஆகிய மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தில், கின்னௌர் கைலாஷ் யாத்திரைப் பாதையில் சிக்கித் தவித்த 413 பக்தர்கள் மீட்கப்பட்டனர்.

துணை ஆணையர் ஜெனரல் மொஹ்சென் ஷாஹேடி செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அவசரக்கால படையின் மூன்று குழுக்கள் தராலி கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தன, ஆனால் நிலச்சரிவுகள் காரணமாக ரிஷிகேஷ்-உத்தரகாசி நெடுஞ்சாலை தடைப்பட்டதால் தாமதமாகியுள்ளது.

மோசமான வானிலை காரணமாக டேராடூனில் இருந்து இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் விமானம் மூலம் செல்வதும் தடைப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்குக் கிடைத்த தகவல்களின்படி, ராணுவம், ஐடிபிபி மற்றும் எஸ்டிஆர்எஃப் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், சுமார் 150 பேரை மீட்டுள்ளது. 4 பேர் பலியாகியுள்ளதாகவும், காணாமல் போன சுமார் 50 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் மூன்று குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மிக அருகில் உள்ளதாகவும், பாதை சரியானதும் அவர்கள் அங்குச் செல்வார்கள் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து