முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே விவகாரத்திற்காக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றன: மத்திய அமைச்சர் ரிஜிஜு குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2025      இந்தியா
Kiran-Rijiju 2023-01-16

டெல்லி, ஒரே ஒரு குறிப்பிட்ட விவகாரத்திற்காக மட்டும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன என்றும், பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை என்றும் மத்திய அமைச்சர்  ரிஜிஜு குற்றச்சாட்டியுள்ளார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து, பாராளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதேவேளை, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனால், அவை நடவடிக்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை என்று மத்திய அமைச்சர் யும், பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் யுமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தினமும் நாட்டின் நேரமும், பாராளுமன்றத்தின் நேரமும் ஒரே விவகாரத்திற்காக வீணடிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். ஆகையால், பாராளுமன்றத்தில் முக்கிய மசோதாக்களை நாங்கள் நிறைவேற்றப்போகிறோம்.

முக்கியமான மசோதாக்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை. மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. ஒரே ஒரு குறிப்பிட்ட விவகாரத்திற்காக மட்டும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. 

நீங்கள் ஒரு பிரச்சினையை எழுப்புகிறீர்கள். அதற்கு ஒரு நாள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதே பிரச்சினையை ஒவ்வொரு நாளும் எழுப்புவதால் என்ன பயன். வருமான வரி மசோதா, தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, வணிக கப்பல் மசோதா, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு (திருத்தம்) மசோதா, மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிலுவையில் உள்ளன. முக்கிய மசோதாக்களை பாராளுமன்றத்தி இரு அவைகளிலும் நிறைவேற்றுவோம்.  இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து