Idhayam Matrimony

சின்கியுபீல்ட் கோப்பை செஸ்: 6-வது சுற்றில் பிரக்ஞானந்தா முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Praggnanandha 2025-06-29

Source: provided

செயின்ட் லூயிஸ் : சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டில் 6-வது சுற்றில் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.

கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமான சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு நடந்த 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, போலந்தின் டுடா ஜன் கிர்சிஸ்டோப்பை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 32-வது நகர்த்தலில் டிரா கண்டார். முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா அதன் பிறகு தொடர்ச்சியாக சந்தித்த 5-வது டிரா இதுவாகும். இதேபோல் உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த குகேஷ், பிரான்சின் அலிரெஜா பிரோவ்ஜாவுடன் மோதிய ஆட்டம் 78-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. சாம் செவியன்-பாபியானோ கருனா (இருவரும் அமெரிக்கா), லெவோன் அரோனியன்-வெஸ்லி சோ (இருவரும் அமெரிக்கா), நோடிர்பெக் அப்துசத்தோரோவ் (உஸ்பெகிஸ்தான்)-மேக்சிம் வச்சியர் லக்ரேவ் (பிரான்ஸ்) இடையிலான ஆட்டங்களும் டிரா ஆனது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 6-வது சுற்று முடிவில் பாபியானோ கருனா 4 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். லெவோன் அரோனியன், பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 3½ புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து