Idhayam Matrimony

துப்பாக்கி சுடும் போட்டியில் அண்ணாமலை அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Annamalai 2025-08-26

Source: provided

புதுக்கோட்டை : கீரனூரில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் அண்ணாமலை அறிவுரை வழங்கினார்.

கீரனூர் அருகே நடைபெற்று வரும் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதக்கம் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆவாரங்குடிப்பட்டியில் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 22-ம் தேதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கி, பாராட்டினார். பின்னர் அவர் பேசியதாவது: விளையாட்டு வீரர்கள் படிப்பிலும் கவனம் செலுத்திக்கொண்டு விளையாட்டிலும் திறம்பட வளர வேண்டும். தோல்வி வந்துவிட்டது என்பதற்காக துவண்டு விடக்கூடாது. தோல்வி ஒரு நாள் வெற்றியாக மாறும். அதுவரை நாம் தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றார். பதக்கத்தை கையில் வாங்கிய டிஆர்பி.ராஜா மகன்: வெற்றி பெற்ற அனைவருக்கும் பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பதக்கங்களை கழுத்தில் அணிவித்து வந்த நிலையில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகன் சூரிய ராஜ பாலு கழுத்தில் அணிவிக்க மறுத்து, கையில் வாங்கிக் கொண்டார். பின்னர், அண்ணாமலையுடன் சேர்ந்து நின்று படம் எடுத்துக் கொண்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து