முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 ஆண்டுகளாக தொடர்ந்து அயராது தேச சேவை: ஆர்.எஸ்.எஸ்.க்கு பிரதமர் மோடி புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2025      இந்தியா
Modi

Source: provided

டெல்லி : பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மான் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் உரையாற்றினார். அவர் நேற்று 126-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி விழா ஆகும். காந்தி எப்போதும் சுதேசியை ஏற்றுக்கொள்வதை வலியுறுத்தினார். அவற்றில் காதி முதன்மையானது. துரதிர்ஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு காதியின் வசீகரம் மங்கிக் கொண்டிருந்தது.

ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் காதி மீதான நாட்டு மக்களின்ஈர்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் காதி விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அக்டோபர் 2-ந்தேதி காதி பொருட்களை வாங்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

காதியைப் போலவே, நமது கைத்தறி மற்றும் கை வினைத் துறையும் குறிப்பி டத்தக்க மாற்றங்களைக் கண்டு வருகிறது. தமிழ் நாட்டை சேர்ந்த அசோக் ஜெகதீசன், பிரேம் செல்வராஜ் ஆகியோர் தங்கள் நிறுவன வேலைகளை விட்டுவிட்டு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டனர்.

அவர்கள் புல் மற்றும் வாழை நார்களிலிருந்து யோகா பாய்களை உருவாக்கினர். மூலிகை சாயங்களால் ஆடைகளுக்கு சாயம் பூசினர்.மேலும் 200 குடும்பங்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை வழங்கினர். சத் பூஜையை யுனெஸ்கோ வின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்க இந்திய அரசு பாடுபடுகிறது. சத் பூஜை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்படும்போது, உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்கள் அதன் மகத்துவத்தையும் தெய்வீ கத்தையும் அனுபவிக்க முடியும்.

இந்த விஜயதசமி மற்றொரு காரணத்திற்காகவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாள் ஆர்.எஸ்.எஸ் நிறுவப்பட்ட 100 ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்த நூற்றாண்டு பயணம் அற்புதமானது, முன்னோடியில்லாதது மற்றும் ஊக்கம ளிக்கிறது. தியாகம், சேவை உணர்வு, ஒழுக்கத்தின் போதனைகள் ஆகியவை ஆர்.எஸ்.எஸ்சின் உண்மையான பலம். ஆர்.எஸ்.எஸ் நூறு ஆண்டுகளாக அயராது மற்றும் தடையின்றி தேசத்திற்கு சேவை செய்வதில் ஈடுபட்டுள்ளது.

இதனால்தான் நாட்டில் எங்காவது இயற்கை பேரழிவு ஏற்பட்டால் ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் முதலில் அங்கு செல்கிறார்கள்.தேசம் முதலில் என்ற இந்த உணர்வு எப்போதும் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு முயற்சியிலும் முதன்மையானது.தேசத்திற்கு சேவை செய்யும் மாபெரும் யாகத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து