முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளியை முன்னிட்டு இன்றும், நாளையும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்

சனிக்கிழமை, 4 அக்டோபர் 2025      தமிழகம்
Ration 2025-08-12

Source: provided

சென்னை : தீபாவளியை முன்னிட்டு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொது வினியோகத்திட்ட பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதத்தின் 5 மற்றும் 6-ந் தேதிகளில் வீடு தேடி குடிமைப்பொருட்களை வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை அனைத்து ரேஷன்கடைகளிலும் பொது மக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என  தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து