முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் பனிப்புயல்: 2 ராணுவ வீரர்கள் பலி

சனிக்கிழமை, 11 அக்டோபர் 2025      இந்தியா
Kashmir 2024-03-28

Source: provided

கிஷ்த்வார் : ஜம்மு-காஷ்மீரில் பனிப்புயலில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கோகர்நாக் பகுதிக்கு உட்பட்ட கிஷ்த்வார் சரகத்தில் கடும் குளிருக்கு இடையே பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வீரர்களான பலாஷ் கோஷ் மற்றும் சுஜய் கோஷ் ஆகிய இருவரும் கடும் குளிரில் சிக்கினர்.

பனிப்புயலில் சிக்கிய அவர்களை தேடும் பணி தீவிரமடைந்தது. எனினும், இருவரின் உயிரற்ற உடல்களையே வீரர்கள் மீட்டனர். இதுபற்றி இந்திய ராணுவம் வெளியிட்ட செய்தியில், அவர்களுடைய தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை எப்போதும் எங்களுக்கு ஓர் உந்துதலாக இருக்கும். அவர்களுடைய உயரிய தியாகத்திற்கு ராணுவம் மதிப்பளிக்கிறது என தெரிவித்து உள்ளது.

வீரர்களின் துணிச்சல் மற்றும் தியாகம் ஆகியவற்றுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கிறோம். அவர்களின் நலனுக்காக நாங்கள் செயல்படுபோம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து வந்து ராணுவ சேவையில் ஈடுபட்டு வந்தனர். பனிப்புயலில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து