முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமணத்திற்காக உறவினரின் வீட்டில் தங்கம், பணத்தை திருடிய நபர் கைது

சனிக்கிழமை, 11 அக்டோபர் 2025      இந்தியா
Jail

Source: provided

பெங்களூரு : திருமணத்திற்காக உறவினரின் வீட்டில் தங்கம், பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகாவில் காதலியை திருமணம் செய்வதற்கு பணம் தேவைப்பட்டதால் உறவினரின் வீட்டில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை திருடிய 22 வயது நபரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரேயாஸ் (22 வயது) என்ற வாலிபர் தனது உறவினரான ஹரிஷ் என்பவருக்கு சொந்தமான கடையில் வேலை செய்து வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்த ஸ்ரேயாஸ், அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டுள்ளது.

அதற்காக ஸ்ரேயாஸ், ஹரிஷின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஹரிஷின் வீட்டிற்குள் புகுந்த ஸ்ரேயாஸ் அங்கிருந்த தங்கம் மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து ஹரிஷ் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து ஸ்ரேயாஸைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 416 கிராம் தங்கம் மற்றும் ரூ.3.46 லட்சம் பணத்தை மீட்டனர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.47 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து