எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1248.24 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 சாலைகள் மற்றும் 2 சாலை மேம்பாலங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (1.11.2025) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஈரோடு, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருநெல்வேலி, அரியலூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 1,177 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணிகள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் 71 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் ரெயில்வே கடவுகளுக்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள இரண்டு சாலை மேம்பாலங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசு தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை உருவாக்கிடும் வகையில், நெடுஞ்சாலை துறை வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், மேம்பாடு செய்தல், புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல் ஆகிய பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 272 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில் (மாநில நெடுஞ்சாலை எண் 15) (கி.மீ 123-153/6) 30.60 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தப்பட்ட கோபி - ஈரோடு சாலை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் 221 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் 10 மீ அகல இருவழிச்சாலையாக (மாநில நெடுஞ்சாலை 23-1) (கி.மீ 4/5-20/925) 16.425 கி.மீ நீளத்திற்கு தரம் உயர்த்தப்பட்ட மயிலாடுதுறை – திருவாரூர் சாலையை முதல்வர் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 197 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் 10 மீ அகல இருவழிச்சாலையாக (மாநில நெடுஞ்சாலை –66) (கி.மீ. 3/6-8/6) 5.0 கி.மீ நீளத்திற்கும் மற்றும் (கி.மீ 13/9-கி.மீ 23/8) 9.90 கி.மீ நீளத்திற்கும் தரம் உயர்த்தப்பட்ட கும்பகோணம் - மன்னார்குடி சாலை, திருவள்ளூர் மாவட்டத்தில் 111 கோடி ரூபாய் செலவில் (கி.மீ. 7/0-18/4) 11.40 கி.மீ நீளத்திற்கு இரு வழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட கொரட்டூர் - தின்னனூர் - பெரியபாளையம் சாலை மற்றும் 82 கோடி ரூபாய் செலவில் (கி.மீ.7/0-16/2) 9.20 கி.மீ நீளத்திற்கு இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட திருவள்ளூர் - அரக்கோணம் சாலை, திருநெல்வேலி மாவட்டத்தில் 65 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் (கி.மீ 0/0-6/049) 6.049 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்ட அம்பாசமுத்திரம் புறவழிச் சாலையை முதல்வர் திறந்து வைத்தார்.
முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அரியலூர் மாவட்டத்தில் 60 கோடி ரூபாய் செலவில் (கி.மீ 6/8-14/8) 8.0 கி.மீ நீளத்திற்கும், 62 கோடி ரூபாய் செலவில் (கி.மீ. 14/8-21/0) 6.20 கி.மீ நீளத்திற்கும் மற்றும் 63 கோடி ரூபாய் செலவில் (கி.மீ. 21/0-27/6)6.60 கி.மீ நீளத்திற்கும் (மாநில நெடுஞ்சாலை-140) இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் - மதனத்தூர் சாலை முதல்வர் திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டத்தில் 41 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் திருப்பரங்குன்றம், மதுரை - திருமங்கலம் சாலைப்பகுதி (மாநில நெடுஞ்சாலை- நகர்பகுதி எண்.101); கி.மீ.2/550- 3/750-ல் வலதுபுறத்தில் உள்ள தென்கால் கண்மாய் கரைவழியாக 1.20 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்ட இருவழிச்சாலை, வேலூர் மாவட்டத்தில் 35 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் கூடநகரம் - அனங்காநல்லூர் சாலையில் கி.மீ 3/0-ல் ரெயில்வே கி.மீ. 160/2-4ல் உள்ள கடவு எண்.67-க்கு மாற்றாக மேலாலத்தூர் - வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கிடையே கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம், லட்சுமி அம்மாள்புரம் - நாவிதம்பட்டி சாலையில் கி.மீ 0/2-ல் ரெயில்வே கி.மீ. 168/12-14ல் உள்ள கடவு எண்.72-க்கு மாற்றாக மேல்பட்டி - வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கிடையே 35 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார். மொத்தம் 1,248 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 சாலைகள் மற்றும் இரு சாலை மேம்பாலங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான 'ஆன்லைன்' முன்பதிவு இன்று தொடங்குகிறது
31 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டது.
-
விரைவில் சபரிமலையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி அறிமுகம்
31 Oct 2025கூடலூர் : சபரிமலையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
31 Oct 2025கூடலூர் ,: நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்: அமலாக்கத்துறையின் புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
31 Oct 2025திருச்சி : குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமலாக்கத்துறை புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-11-2025.
01 Nov 2025 -
உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்
31 Oct 2025மதுரை : உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்றது.
-
தொழில்நுட்ப வலிமையால் ஆபரேஷன் சிந்தூர் கொள்கை : ராணுவ தலைமை தளபதி பெருமிதம்
01 Nov 2025போபால் : ஆபரேஷன் சிந்தூர் கொள்கை, தொழில்நுட்ப வலிமையால் மேற்கொள்ளப்பட்டது என்று ராணுவ தலைமை தளபதி தெரிவித்தார்.
-
1040-வது சதய விழா: மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
01 Nov 2025சென்னை : மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு மாமன்னர் ராஜராஜ சோழன் புகழ் போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை : முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
01 Nov 2025மதுரை : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
-
அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு: தான்சானியா வன்முறையில் 700 பேர் பலி
01 Nov 2025டொடோமா : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் 700 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு: திண்டுக்கல் சீனிவாசன்
01 Nov 2025மதுரை : எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
-
ஆந்திரா கூட்ட நெரிசல்: பிரதமர் மோடி இரங்கல்
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
அதிநவீன சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன எல்.வி.எம்.–3 எம்5 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
01 Nov 2025திருப்பதி, கடலோர எல்லைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் எல்.வி.எம்.-3 ராக்கெட
-
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது : சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பேச்சு
01 Nov 2025ராய்ப்பூர் : மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்க
-
மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1248.24 கோடி செலவில் சாலைகள், மேம்பாலங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
01 Nov 2025சென்னை : நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1248.24 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 சாலைகள் மற்றும் 2 சாலை மேம்பாலங்களை தமிழ்நாடு முதல்வர
-
இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் கேரளா : முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : வறுமை விகிதம் அதிகரித்திருந்த 1961-62 காலகட்டத்தில் இருந்து மாநிலம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது என பினராயி விஜயன் பேசியுள்ளார்.
-
ஆந்திர பிரதேசத்தில் சோகம்: கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலி
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
பெங்களூரு-எர்ணாகுளம் இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்கம் : ஈரோடு, கோவை வழியாக - நேரம் அறிவிப்பு
01 Nov 2025கொச்சி : கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவிற்கு விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படவுள்ளது.
-
நான் மக்களுக்காக உழைத்தேன், என் குடும்பத்திற்காக அல்ல: நிதிஷ் குமார்
01 Nov 2025பாட்னா, பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நிதிஷ்குமார் நான் மக்களுக்காக உழைத்தேன் என் குடும்பத்திற்காக அல்ல என்று தெரிவித்தார்.
-
இந்திய கலாச்சாரம் குறித்து ராகுலுக்கு தெரியவில்லை : பீகார் பிரச்சாரத்தில் அமித்ஷா தாக்கு
01 Nov 2025பாட்னா : ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த நடிகர் அஜித்
01 Nov 2025சென்னை : கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று நடிகர் அஜித்குமார் முதல்முறையாக அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
-
பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களை பறித்தார் மன்னர் சார்லஸ் : வீட்டை காலி செய்யவும் உத்தரவு
01 Nov 2025லண்டன், பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ அரச பட்டங்கள் பறிக்கப்பட்டதையடுத்து வீட்டை காலி செய்ய சார்லஸ் உத்தரவிட்டார்.
-
தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்
01 Nov 2025சென்னை : தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
செங்கோட்டையன் நீக்கம் ஏன்? - இ.பி.எஸ். பரபரப்பு விளக்கம்
01 Nov 2025சேலம் : செங்கோட்டையன் கட்சியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். அப்போது அ.தி.மு.க.


