முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் சபரிமலையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி அறிமுகம்

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      இந்தியா
Sabarimala 2023-11-17

Source: provided

கூடலூர் : சபரிமலையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக வருகிற நவம்பர் 17-ந் தேதி நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27-ந் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளது. ஒரு மண்டலம் விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். அதனைத் தொடர்ந்து மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்நிலையில் பக்தர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து தேவசம்போர்டு செயலர் ராஜமாணிக்கம் கூறியதாவது:-

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் தற்போது ஆன்லைன் மூலம் பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனர். அவர்கள் வசதிக்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய பலமொழி தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் தரிசனம், தங்கும்வசதி, அவசரதேவை, மருத்துவவசதி, காலநிலை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு தகவல்களையும் அதில் குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம்.

நிலக்கல்லில் வழக்கமாக நடப்பாண்டு 1500 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாகன பாதுகாப்பு, தடையற்ற இயக்கத்தை கண்காணிக்கும் வகையில் புதிதாக 3 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும். இங்கிருந்து பத்தினம்திட்டா, எரிமேலி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.

இந்த ஆண்டு கேரள அரசு சார்பில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். நிலக்கல்-பம்பை இடையே சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இந்த பஸ்கள் இயங்கும். இதய பாதிப்பு உள்ளிட்ட குறிப்பிட்ட நோய்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகள் தேவசம்போர்டு சார்பில் வழங்கப்படும். இதற்கான நிதி ஆதாரத்துக்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் விருப்ப கட்டணமாக ரூ.5 பெறப்படும்.

பதிவு செய்யும் பக்தர்கள் கேரளாவுக்குள் நுழைந்து வெளியேறும் வரை காப்பீட்டு திட்டத்தில் பல்வேறு வசதிகளை பெற இயலும். கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேரடி புக்கிங் செய்பவர்கள் நெரிசல் இல்லாத நேரங்களில் தரிசனத்துக்கு அனுப்பப்படுவார்கள். எனவே இயன்ற வரை ஸ்பார்ட் புக்கிங் செய்வதை தவிர்க்க வேண்டும். பக்தர்களுக்கு செய்து தர வேண்டிய மேலும் சில பாதுகாப்பு வசதிகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து