முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
உலகிலேயே மிகவும் பெரிய விலங்கு எது தெரியுமா?

உலகிலேயே மிகவும் பெரிய விலங்கு நீல திமிங்கலம். பூமியில் வாழும் விலங்குகளில் இவைதான் மிகப் பெரியது என கணக்கிடப்பட்டுள்ளது. 1909 இல் பிடிபட்ட  பெண் நீல திமிங்கலம் ஒன்றில் நீளம் 100 அடி 17 அங்குலம். அதே போல 1947 இல் வேட்டையாடப்பட்ட மற்றொரு நீல பெண் திமிங்கலத்தின் எடை 190 டன் அதாவது 189,999.865 கிலோ. அதாவது 2500 மனிதர்களுக்கு இணையான எடை என்றால் அதன் பிரமாண்டத்தை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

இரண்டு இரைப்பை கொண்ட விலங்கு எது தெரியுமா?

இரண்டு இரைப்பை கொண்ட விலங்கு எது தெரியுமா.. மனிதர்களுடன் மிகவும் நட்பாக பழகும் டால்பின்கள் தான். ஒன்று உணவை சேகரிக்கவும், ஒன்று செரிமானத்துக்கும் பயன்படுகிறது. டால்பின்கள் பிறந்த பிறகும் தங்களது தாய் விலங்குடன் நெருக்கமாகவே இருந்து வருபவை. சில 3 அல்லது 8 ஆண்டுகள் வரையிலும் கூட தாயுடனேயே சுற்றி தெரியும். டால்பின்களால் ஆயிரம் அடி வரையிலும் கூட தாவ முடியும். டால்பின்கள் சுமார் 50 ஆண்டுகள் வரையிலும் உயிர் வாழக் கூடியவை. டால்பின்களில் மட்டும் 40க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

உலகில் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு எது?

உலகில் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு எது தெரியுமா.. நீங்கள் இந்தியா என்று எண்ணினால் அது தவறு. இன்றைக்கும் சீனா தான் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. பண்டைய காலத்தில் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சீன பட்டுகளை கொண்டு செல்வதற்காகவே தனியாக வழித்தடங்கள் உருவாக்கப்பட்டன. அவை இன்றும் பட்டுச்சாலை அல்லது சில்க் ரூட் என அழைக்கப்படுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் பட்டு நூல் தயாரித்ததற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. அதே போல பருத்தி மற்றும் கம்பளி ஆடைகளை உருவாக்கியதிலும் சீனர்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர்.

நாம் வீசியெறியும் ஆடைகள் மட்க எத்தனை ஆண்டுகள் தேவை?

உலகம் முழுவதும் நாகரிகமடைந்த மனிதர்கள் ஆடைகளை அணிய தொடங்கினர். அதுவும் தற்போது டிசைன் டிசைனாக ஆடைகளை அணிந்து தள்ளுகிறோம். உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான டெக்ஸ்டைல் கழிவுகளை வெளியேற்றுகிறோம். நாம் அணியும் ஆடைகள் மட்கி போக எடுத்துக் கொள்ளும் ஆண்டுகள் எவ்வளவு தெரியுமா...40 ஆண்டு காலம் ஆகுமாம். பெரும்பாலான உடைகள் சாயங்களாலும், ரசாயனங்களாலுமே நிறமேற்றப்படுவதால் அவை நிலத்தை விஷமாக்குகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் டெக்ஸ்டைல் கழிவு எவ்வளவு?

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் வாழும் தனிநபர் சுமார் 40 கிலோ எடையுள்ள டெக்ஸ்டைல் கழிவுகளை வெளியேற்றுகிறார். அமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 11 மில்லியன் டன் அளவுக்கு டெக்ஸ்டைல் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. அவை அனைத்தும் நிலத்தில் பரவி அதை விஷத்தன்மை உள்ளதாக ஆக்குகின்றன. காற்றில் பரவி காற்று மாசை ஏற்படுத்துகிறது. புவி வெப்பமயதாலுக்கு முதன்மை காரணி இது போன்று வெளியேற்றப்படும் கழிவுகள்தான் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

காட்டன் சட்டை தயாரிக்க எவ்வளவு நீர் வேண்டும் தெரியுமா?

இன்றைய நவீன யுகத்தில் காட்டன் சர்ட்தான் இளைஞர்களின் மோஸ்தராக உள்ளது. ஆனால் இதை தயாரிப்பது அத்தனை சுலபம் கிடையாது. காட்டன் துணிகளை உருவாக்க ஏராளமான நீர் தேவைப்படும். உதாரணமாக சொன்னால் ஒரு காட்டன் டீ சர்ட் தயாரிக்க பயன்படும் நீரை ஒரு மனிதன் 900 நாட்களுக்கு பருகலாம். அதாவது ஒரு காட்டன் சர்ட் தயாரிக்க 2800 லிட்டர் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு ஜோடி ஜீன்ஸ் தயாரிக்க புல்வெளியில் 9 மணி நேரம் தேங்க விடுவதற்கு இணையான அளவுக்கு நீர் தேவைப்படும்.