முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சூடான பாலை குடித்தால் இரவில் நன்றாக தூக்கம் வருவது ஏன்?

Image Unavailable

இரவில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலை குடித்தால் நன்றாக தூக்கம் வருவது ஏன் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நம் நாடுகளில் நீண்ட காலமாகவே இரவு உறக்கத்துக்கு முன்பு சூடாக ஒரு டம்பளர் பால் குடிப்பது வழக்கம். தற்போது மேலை நாடுகளிலும் இரவில் நன்றாக உறங்க பால் குடிக்க பரிந்துரைக்கப்படுகின்றனர். 

பாலில் தூக்கத்தை மேம்படுத்தும் கூறுகளை பொதுவாக டிரிப்டோபன் என குறிப்பிடுகின்றனர். அண்மையில் அமெரிக்காவில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்  கேசீன் ட்ரிப்டிக் ஹைட்ரோலைசேட் (சிடிஎச்) எனப்படும் பெப்டைட்டுகளின் கலவையை கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக அமெரிக்கர்கள் பெரும்பாலானோர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர்.

அவர்களுக்கு அளிக்கப்படும் பென்சோடியாசெபைன்கள், சோல்பிடெம் போன்றவை கடுமையான பக்க விளைவை ஏற்படுத்துபவன. ஆனால் பசுவின் பாலில் கிடைக்கும் கேசீன் எனப்படும் புரதம் செரிமானத்தை மேம்படுத்தி சிடிஎச் எனப்படும் தூக்கத்தை மேம்படுத்தும் பெப்டைட்களின் கலவையை கொண்டிருப்பதால் இயற்கையாகவே தூக்கத்தை வரவழைக்கக் கூடியது என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்