முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தகவல் பரிமாற்றத்துக்கு தந்தி என்ற கருவி இருந்தது தெரியுமா?

Image Unavailable

இன்றைக்கு தகவல் பரிமாற்ற தொழில் நுட்பம் தொலைபேசி, அலைபேசி, இமெயில், எஸ்எம்எஸ், என்று படிப்படியாக வானளாவிய அளவில் வளர்ந்து விட்டது. ஆம் உண்மையிலேயே வானத்துக்கு சென்று விட்டது. செயற்கை கோள்கள் மூலம் தகவல் பரிமாற்ற காலத்தை அடைந்துள்ளோம். ஆனால் தொடக்கத்தில் டெலிகிராஃப் எனப்படும் தந்தி என்ற முறையில் செய்திகளை அனுப்பினோம். இதை அமெரிக்காவில் உள்ள ஓவியர் சாமுவேல் மோர்ஸ் என்பவர் 1837 இல் கண்டுபிடித்தார். எனவே தந்திக்கு மோர்ஸ் தந்தி என்ற பெயர் வந்தது.  அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு முதல் தந்தி 1838 ஜனவரி 11-ஆம் தேதி அனுப்பப்பட்டது.  பொதுமக்களுக்கான முதல் தந்தி சேவையை பிரிட்டன் 1846 இல் நிறுவியது. இந்தியாவில் 1850 இல் சோதனை முறையில் கொல்கத்தாவுக்கும் டயமண்ட் துறைமுகத்துக்கும் இடையே நிறுவப்பட்டது. இதன் பின்னர் 1851 இல் கிழக்கிந்திய கம்பெனி இதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. 1902 இல் முதன்முறையாக கம்பியில்லா தந்தி முறை அறிமுகமானது. செல்பேசிகள், இ-மெயில் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இந்தியாவில் தந்தி சேவை பயன்பாடு முற்றிலுமாக நின்றுவிட்டது. 2009-10-ஆம் ஆண்டுகளில் தந்தி சேவை பயன்பாடு 100 சதவீதம் குறைந்துவிட்டது. இதையடுத்து 2013 ஜூலை 15 முதல் இந்தியாவில் தந்தி சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago