எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ரெமோ' பட நன்றி விழா
'ரெமோ' பட நன்றி விழா
உணர்ச்சிகரமான திருவிழாவாக மாறிய 'ரெமோ' படத்தின் நன்றி விழா
சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ரெமோ திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகி இருந்தாலும், திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் இன்னும் அலைமோதி கொண்டு தான் இருக்கிறது.... வர்த்தக ரீதியாக அமோக வசூலை பெற்று வரும் ரெமோ திரைப்படத்திற்காக தங்களின் ஆதரவை தொடர்ந்து அளித்து வந்த விநியோகஸ்தர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக , தயாரிப்பாளரும், 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆர் டி ராஜா ஒரு பிரம்மாண்ட நன்றி விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.
நேற்று சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்ற இந்த நன்றி விழாவில், ரெமோ திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களான திருப்பூர் சுப்ரமணியம், சேலம் ராஜ மன்னார், மதுரை அழகர்சாமி, நார்த் ஆற்காடு - சவுத் ஆற்காடு ஸ்ரீநிவாசன், ஜாஸ் சினிமாஸ் கண்ணன், திருச்சி பிரான்சிஸ் அடைக்கலராஜ், திருநெல்வேலி பிரதாப் ராஜா, வெளிநாட்டு விநியோகஸ்தர் யஹிரா பாய் ஆகியோரும், ரெமோ படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவினர்களான தயாரிப்பாளர் ஆர் டி ராஜா, இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் அனிரூத், சவுண்ட் என்ஜினீயர் ரசூல் பூக்குட்டி, படத்தொகுப்பாளர் ரூபன், ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி, பாடலாசிரியர்கள் விவேக் - கு கார்த்திக், கே எஸ் ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், சதீஷ், ஆன்சன் மற்றும் யோகி பாபு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பாடலாசிரியரில் ஆரம்பித்து கதாநாயகன் வரை அனைவரும் ரெமோ படத்தின் நன்றி விழாவை உணர்ச்சிகரமான திருவிழாவாக மாற்றி விட்டனர்.
"ரெமோ படத்தின் வெற்றிக்கு ஒரு மூல காரணம் சிவகார்த்திகேயன்... அதே போல் பழம்பெரும் ஒளிப்பதிவாளர் பி சி சாரின் பெயருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த கைத்தட்டல்கள் இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது.... தற்போது தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தாயாக வலம் வந்து கொண்டிருப்பவர் சரண்யா... ரெமோ படத்தில் அவரின் கதாபாத்திரம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை அள்ளிக் குவித்து கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்திற்கு பிறகு நான் விநியோகம் செய்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை... ஆனால் ரெமோ படம் எனக்கு அளித்த உற்சாகமும், புத்துணர்வும், என்னை மீண்டும் விநியோக துறையில் ஈடுப்பட செய்தது... பொதுவாகவே விநியோகஸ்தர்கள் தான் ஒரு திரைப்படத்தை வாங்க தயாரிப்பாளரை நாடி செல்வர்.... ஆனால் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா எந்தவித ஈகோவும் இன்றி எங்களை வந்து சந்தித்தது எங்களுக்கு எல்லா விநியோகஸ்தர்களுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது...ரெமோ திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய தூண் ஆர் டி ராஜா என்பதை நான் உறுதியாகவே சொல்வேன்..." என்று கூறினார் முன்னணி விநியோகஸ்தர்களுள் ஒருவரான திருப்பூர் சுப்ரமணியம்.
"ஒரு திரைப்படத்திற்கு நன்றி விழா என்பதை நான் இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன்... சினிமா மீது அளவு கடந்த அன்பும், சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்து கொள்ளும் குணம் கொண்ட மனிதர்களால் தான் இத்தகைய செயல்களை செய்ய முடியும்.... அப்படி நான் பார்த்த தயாரிப்பாளர்களுள் ஆர் பி சொளத்ரி சாரும், ஏ எம் ரத்னம் சாரும் சிலர்.... அப்படி ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் ஆர் டி ராஜாவை பார்க்கிறேன்....ரெமோ படத்தின் உண்மையான வெற்றிக்கு சான்றாக திகழ்பவர்கள் விநியோகஸ்தர்கள்....அவர்களை மேடையேற்றி, தன்னுடைய நன்றிகளை தெரிவித்த தயாரிப்பாளர் ஆர் டி ராஜாவிற்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்...." என்று உற்சாகமாக கூறினார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.
"ரசிகர்களுக்கு தரமான படங்களை வழங்கி, அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே எங்களின் தலையாய கடமை. எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரின் இரண்டரை வருட உழைப்பு தான் 'ரெமோ'....தயாரிப்பாளர் ஆர் டி ராஜா அவர்களுக்கும், அவருடைய குழுவிற்கும் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை... ஆனால் அவர்கள் குடும்பத்தில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் கூறி கொள்கிறேன்....இவ்வளவு தூரம் எங்களுக்கு ஆதரவு வழங்கி, தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் என்னுடைய அன்பான ரசிகர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...." என்று கூறினார் சிவகார்த்திகேயன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பூண்டு உருளைக்கிழங்கு ரோஸ்ட்![]() 2 days 12 hours ago |
பன்னீர் மஞ்சூரியன்![]() 5 days 12 hours ago |
சிக்கன் சாசேஜ்![]() 1 week 2 days ago |
-
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு : 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 8-ம் தேதி வரை விடுமுறை
02 Oct 2023சென்னை : தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-02-10-2023
02 Oct 2023 -
ஒடிசாவின் 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை : இந்திய வானிலை மையம் தகவல்
02 Oct 2023புவனேஸ்வர் : ஒடிசாவின் 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஸ்லோவாக்கியா பாராளுமன்ற தேர்தல்: மீண்டும் வெற்றி பெற்றார் மாஜி அதிபர்
02 Oct 2023பிராடிஸ்லாவா : கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள சிறிய நாடுகளின் ஒன்றான ஸ்லோவாக்கியாவில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த நாட்டின் மாஜி அதிபரே மீண்டும் வெற்றி பெற்று
-
வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என அறிவிப்பு
02 Oct 2023சென்னை : வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா இனறு திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
-
காந்தி ஜெயந்தி: சென்னையில் உருவப்படத்திற்கு கவர்னர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
02 Oct 2023சென்னை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆ
-
வாழ்வு தொடங்குமிடம் நீதானே - விமர்சனம்
02 Oct 2023ஜெயராஜ் பழனி இயக்கத்தில் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் வாழ்வு தொடங்குமிடம் நீதானே. எஸ்.
-
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம்: தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
02 Oct 2023சென்னை : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழக விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
02 Oct 2023சென்னை : இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற அறிவியல் மேதைகளான ஒன்பது விஞ்ஞானிகளுக்கு தமிழக அரசி
-
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள்: டெல்லி நினைவிடத்தில் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, கார்கே மரியாதை
02 Oct 2023புதுடெல்லி : மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள் நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கா
-
சந்திரமுகி-2 விமர்சனம்
02 Oct 2023ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், லட்சுமிமேனன் உள்ளிட்டோர் நடிப்பில் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பி. வாசு இயக்கியிருக்கும் படம் சந்திரமுகி 2.
-
SD மணிபால் இயக்கும் சாலா
02 Oct 2023பீப்பிள் மீடியா ஃபேக்டரி டி.ஜி. விஸ்வ பிரசாத் தயாரிக்கும் படம் சாலா. ரியலிஸ்டிக் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக தீரன் நடிக்கிறார்.
-
அக்.6ல் வெளியாகும் The Exorcist Believer
02 Oct 2023ஹாலிவுட்டின் பிரபலமான Halloween தொடர் படங்களை இயக்கியுள்ள David Gordon Green இயக்கியிருக்கும் படம் The Exorcist Believer, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு The Exorci
-
ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் சில நொடிகளில்
02 Oct 2023ஜீன்ஸ், மின்னலே போன்ற படங்களைக் கொடுத்த மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'சில நொடிகளில்' என்ற படத்தை இப்போது வெளியிடுகிறது.
-
மணிப்பூரில் மாணவர்கள் கொலை: 4 பேரை கைது செய்தது சி.பி.ஐ.
02 Oct 2023இம்பால் : மணிப்பூரில் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. போலீசார் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை கர்நாடகா சட்டப்படி கொடுக்கும் : காங். தலைவர் கே.எஸ்.அழகிரி திட்டவட்டம்
02 Oct 2023சென்னை : தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு சட்டப்படி கொடுக்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.
-
மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதால் தமிழக கிராமப்பகுதிகளில் பணப்புழக்கம் அதிகரிப்பு : கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பேச்சு
02 Oct 2023சென்னை : மகளிருக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்குவதால் தமிழக கிராம பகுதிகளில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
சென்னையில் இன்று நடைபெறவிருந்த பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
02 Oct 2023சென்னை : சென்னையில் பா.ஜ.க.
-
சினிமாவின் முதுகெலும்பு எது - எஸ்.ஆர்.பிரபு பேச்சு
02 Oct 2023விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் இறுகப்பற்று. யுவராஜ் தயாளன் இயக்கி இருக்கும் இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
-
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
02 Oct 2023சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க.
-
வரும் 7-ம் தேதி வரை பலத்த மழை எச்சரிக்கை : கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி
02 Oct 2023திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் வரும் 7-ம் தேதி வரை மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அம்மாநிலத்தில் கனமழைக்கு 3 பேர் பலியானதாக தெரிவ
-
சித்தா விமர்சனம்
02 Oct 2023சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலரது நடிப்பில் சித்தார்த் தயாரிப்பில் அருண்குமார் இயக்கியிருக்கும் படம் சித்தா. கதை, சித்தார்த்.
-
அரசு போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்க கூடாது : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
02 Oct 2023சென்னை : அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர்களை தனியார் ஏஜென்சி மூலம் நியமிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியதை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வல
-
விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் சொன்ன அமுதன்
02 Oct 2023சி.எஸ்.
-
காமராசரின் நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் மரியாதை
02 Oct 2023சென்னை : பெருந்தலைவர் காமராசரின் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் மரியாதை செலுத்தி உள்ளார்.