முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி இன்று மனுத்தாக்கல்

வியாழக்கிழமை, 24 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.24 - திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முதல்வர் கருணாநிதி இன்று காலையில் வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். திருவாரூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.  கருணாநிதி முதன் முதலாக குளித்தலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பின்னர் பெரும்பாலும் சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட்டு வந்தார். கடந்த தேர்தலில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். மேலும் கடந்த தேர்தலின்போது சென்னையில் உள்ள பல தொகுதிகளில் அ.தி.மு.க.வெற்றிபெற்றது. இதற்குகாரணம் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சாதனை புரிந்தார். இதனால் பயந்துபோன கருணாநிதி தற்போது தனது சொந்த தொகுதியான திருவாரூருக்கு வந்துள்ளார். இன்று அவர் தி.மு.க. சார்பாக வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். இதற்காக அவர் நேற்றுக்காலையில் சென்னையில் இருந்து திருவாரூர் வந்து சேர்ந்தார். நேற்று திருவாரூரில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு பேசினார். 

சென்னையில் இருந்து கருணாநிதியுடன் மகனும் துணைமுதல்வருமான மு.க. ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் மாநில அமைச்சர்கள், பொன்முடி, துரைமுருகன் உள்பட தி.மு.க. கட்சியின் நிர்வாகிகளும்  வந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony