ஐரோப்பிய கால்பந்து: ஜெர்மனி - இத்தாலி இன்று மோதல்

வியாழக்கிழமை, 28 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

வார்ஷா, ஜூன். 29 - ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்க இருக்கும் 2 - வ து அரை இறுதியில் ஜெ ர்மனி மற்றும் இத்தாலி அணிகள் மோதுகின்றன. ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்தப் போட்டி கடந்த 3 வார கால மாக நடக்கிறது. 

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முன் னணி அணிகள் களத்தில் குதித்தன. இந்தப் போட்டி தற்போஅரை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. 

யூரோ கோப்பையில் பங்கேற்று வரும் நட்சத்திர வீரர்கள் மற்றும் முன்னணி வீரர்கள் தரமான ஆட்டத்தை வெளிப் படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி கடந்த 8-ம் தேதி துவங்கியது. இதி ல் முதலில் லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் 8 அணிகள் வெற்ஹி பெற்று கா ல் இறுதிக்கு முன்னேறின. 8 அணிகள் குறைவான புள்ளிகள் பெற்று வெளி யேறின. 

கடந்த 21-ம் தேதி கால் இறுதிச் சுற்று ஆட்டம் துவங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் போர்ச்சுகல் மற்றும் செக். குடி யரசு அணிகள் மோதின. 

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் இறுதியில் போர்ச்சுகல் அணி 1- 0 என்ற கோல் கணக்கில் செக். குடியரசை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி சார்பில் கேப்டன் ரொனால்டோ கோல் அடித்தார். 

பின்பு நடந்த 2-வது கால் இறுதியில் ஜெர்மனி மற்றும் கிரீஸ் அணிகள் மோதின. இதில் ஜெர்மனி சிறப்பாக ஆடி 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

இதனைத் தொடர்ந்து நடந்த 3-வது கா ல் இறுதியில் ஸ்பெயின் மற்றும் பிரான் ஸ் அணிகள் மோதின. இதில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அபாரமாக ஆடி 2- 0 என்ற கோல் கணக்கில் பிரா ன்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. 

அடுத்து நடந்த 4-வது கால் இறுதியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிக ள் மோதின. இதில் பெனால்டி ஷூட்டில் இத்தாலி 4- 2 என்ற கோல் கணக்கி ல் வென்றது. 

யூரோ கோப்பை போட்டியின் அரை இறுதிச் சுற்று ஆட்டம் நேற்று துவங்கி யது. முதல் அரை இறுதியில் போர்ச்சு கல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோ தின. 

இதனைத் தொடர்ந்து இன்று நடக்க இருக்கும் 2-வது அரை இறுதியில் ஜெர் மனி மற்றும் இத்தாலி அணிகள் மோத ஆயத்தமாக உள்ளன. 

ஜெர்மனி மற்றும் இத்தாலி அணியில் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். இத்தா லி அணி முன்னாள் சாம்பியன் அணியாகும். ஜெர்மனி பலம் பொருந்திய யஅணியாகும். 

எனவே வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும். ஒட்டு மொ த்தத்தில் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்பது உறுதி.

இதை ஷேர் செய்திடுங்கள்: