முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்ரீகர்கள் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

ஜம்மு, ஜுன் 29 - அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க புனித யாத்திரை மேற்கொண்ட பக்தர்களில் மேலும் இரண்டுபேர் நேற்று பலியானதைத் தொடர்ந்து பக்தர்களின் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. காஷ்மீரின் தென்பகுதியில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைக் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இதேபோல இந்த ஆண்டும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அமர்நாத் யாத்திரை துவங்கியது. இதுவரை 61  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அணி அணியாகச் சென்று பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். அமர்நாத் யாத்திரிகர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மருத்துவ வசதிகளும் வழி நெடுகிலும் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் யாத்ரீகர்கள் பலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழியில் ஆங்காங்கே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாரடைப்பு காரணமாக 6 யாத்ரீகர்கள் மரணமடைந்துள்ளனர். 

இந்த நிலையில் நேற்று மேலும் இரண்டு பக்தர்கள் மாரடைப்பால் பலியானார்கள். இதைத் தொடர்ந்து அமர்நாத் யாத்திரையில் மாரடைப்பால் மரணமடைந்த பக்தர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஜம்மு அடிவாரத்திலிருந்து 12,465 பக்தர்கள் 5 குழுக்களாக அமர்நாத் புறப்பட்டு சென்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்