முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராட்டத்தால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர். ஜூலை.29 - காஷ்மீர்  மாநிலத்தில்  இளைஞர் ஒருவரை  ராணுவத்தினர்  சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பினர் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தால்  ஸ்ரீநகர் உள்ளிட்ட  காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில்  அலூசா என்ற கிராமத்தில் ஹிலால்  அகமது என்ற  19 வயது  இளைஞர்  ராணுவத்தினரால்  சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ர்பு தெரிரிக்கும் வகையில்  பிரிவினைவாத  அஐப்பை  சேர்ந்த சையது அலி ஜிலாநி  என்பவர் விடுத்த  அழைப்பிற்கிணங்கள்  காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் நேற்று   வேலை நிறுத்தம்  செய்யப்பட்டது. 

ஸ்ரீநகர் உள்ளிட்ட  காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பல நகரங்களில்  கடைகள்  வர்த்தக  நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

பள்ளிகள், கல்லூரிகள், த பல்கலைக்கழகங்கள் ஆகியவை அடைக்கப்பட்டிருந்தனர்.  சாலைகளில்  போக்குவரத்து  நெரிசல்  காணப்படவில்லை.

இந்த ரேலை நிறுத்தத்தின்  காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மக்கலின்  இயல்பு ராழ்க்கை  முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில்  மத்திய  ராணுவ அமைச்சர்  ஏ.கே. அந்தோணி நேற்று  2 நாள் சுற்றுப்பபயணமாக  காஷ்மீர் வந்தார்.

ராணுவத்தினர்  சுட்டுக்கொன்றதாக  கூறப்படும்  காஷ்மீர் இளைஞரின்  மரணம் குறித்து  விசாரணை நடத்த  மத்திய பாதுகாப்பு  துறை  அமைச்சர் ஏ.கே. அந்தோணி  ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தோணியுடன்  மத்திய  பாதுகாப்பு  துறை செயலாளர்  மற்றும்  இந்திய ராமுவ  தளபதி ஆகியோரும்  காஷ்மீரில் முகாமிட்டுள்ளனர்.

காஸ்மீரில்  பாதுகாப்பு  சூழ்நிலை  குறித்து  அதிகாரிகளிடன் ஆய்வு  நடத்திய  அந்தோணி  நான்கு  நாட்களுக்கு முன்பு  ராணுவத்தினராரல் சுட்டுக்கொல்லப்பட்ட  இளைஞர் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்லார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்