முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள்மீது இலங்கை ராணுவம் தாக்குதல் 8 பேர்காயம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

வேதாரண்யம் ஆக - 20 - வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த வெள்ளப்பள்ளம் மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்துள்ளனர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்; காயமடைந்த 8 மீனவர்களை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர் நாகை மாவட்டம். வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மற்றும் வானவன்மகாதேவி கிராம  மீனவர்கள் சுமார் 70க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் 300 பேர் நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் மீன் பிடிக்க சென்றனர் இவர்கள் இரவு 7 மணியளவில் வலை விரித்து கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர் அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் படகை சூழ்ந்து கொண்டு வெள்ளப்பள்ளம் மீனவர்களின் படகுக்குள்  இறங்கி அதிலிருந்த மீனவர்களை கண்மூடித்தனமாக கத்தி, இரும்பு ராடு. இரும்பு ரோப் ஆகியவற்றால் தாக்கினர் மேலும் 5 படகுகளில் இருந்த வலைகளை சேதப்படுத்தினர் ஐஸ்பெட்டிகள், செல்போன், மீன்கள், திசைக்காட்டும் கருவி, மற்றும் டீசல் ஆகியவற்றை கடலி;;;ல் கொட்டினர் படகையும் சேதப்படுத்தினர் இலங்கை ராணுவத்தினர் தாக்கி சித்திரவதைக்குள்ளனதில் மூர்த்தி என்கிற குப்புசாமி (35) படகில் சென்ற அவரும் அன்புசெல்வன் (19) மகாலிங்கம் (25) ஆகியோரும், குமார் படகில் சென்ற முருகையன் (50), அப்புராஜ் (45) ஆனந்த் படகில் சென்ற பொன்னுசாமி (45) சத்தியமூர்த்தி (37), இளையராஜா(20) ஆகிய 8 மீனவர்கள் பலத்த காயமடைந்தனர்  மீன் பிடிக்கச்சென்ற படகுகளில் 10 படகுகளில் சென்ற மீனவர்கள் காலையிலேயே கரை திரும்பிவிட்டனர் இலங்கை ராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளான 5 படகுகளில் இருந்த மீனவர்கள் நேற்று மதியம் கரை திரும்பினர்   இதில் காயமடைந்த 8 மீனவர்களும்  ஆம்புலன்ஸ் மூலம் நாகை  தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் காயமடைந்த மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்

 இச்சம்பவத்;;;;;;;;;;;;;;;;;;;திற்கு எதிர்ப்;பு தெரிவித்து வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 1500 பேர் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ்டுபட்டுள்ளனர் இச் சம்பவம் குறித்து நாகை மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரன், மற்றும் கீழையுர்ை, வேதாரண்யம் கடற்கரை காவல்நிலைய போலிசார், மற்றும் தலைஞாயிறு  போலிசாரும் விசாரித்து வருகின்றனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்