முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையின் உண்மையான நட்புநாடு பாகிஸ்தான்தான்: ராஜபக்சே சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, செப். -16 - இலங்கையின் உண்மையான நட்பு நாடு பாகிஸ்தான் என்றும் பாகிஸ்தானின் உதவி கிடைக்காமல் போயிருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என்றும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றக் குழுவினர் மகிந்த ராஜபக்சேவை அவரது அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினர். அப்போது அக்குழுவிடம் பேசிய மகிந்த ராஜபக்சே, பாகிஸ்தான் தான் இலங்கையின் உண்மையான நட்பு நாடு. பாகிஸ்தான் நாடு மீது இலங்கை ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் உதவி இல்லாவிட்டால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தை இலக்கு வைத்து கண்காணிப்பு நிலையம் அமைக்க பாகிஸ்தான் அனுமதி கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் ராஜபக்சேவின் இந்த நெருக்கமான பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழகத் தமிழர்களின் எதிர்ப்பை மீறி இலங்கை நட்பு நாடு என்று மத்திய அரசு கூறிக் கொண்டாலும் இலங்கையோ தங்களது உண்மையான நட்பு நாடு பாகிஸ்தான் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago