முக்கிய செய்திகள்

இந்திய-சீன எல்லையில் 14-ம் தேதி நிலநடுக்கம்

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      இந்தியா
China

 

புது டெல்லி,ஏப்.12 - இலங்கை கண்டியில் உள்ள பெரடோனியா பல்கலைக் கழக புவியியல் விஞ்ஞானி அதுலா சேனாரத்னா கூறியதாவது, கடந்த 100 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடந்த 6 ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு மேல் உள்ள பூகம்பங்கள் குறித்து நானும் எனது குழுவினரும் ஆய்வு செய்து எதிர்காலத்தில் நடக்கும் பூகம்பங்கள் குறித்து கவனித்து உள்ளோம். 

ஜப்பானில் கடந்த மாதம் நடந்த பூகம்பத்தையும், இந்த மாதம் சில நாட்களுக்கு முன்பு நடந்த பூகம்பத்தையும் ஏற்கனவே கவனித்து கூறி இருந்தேன். அடுத்த சில நாட்களில் மேலும் சில பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வருகிற 14 ம் தேதியில் இருந்து 16 ம் தேதிக்குள் இந்தியா - சீனா எல்லை பகுதியில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்படும். வரும் 16 ம் தேதியில் இருந்து 20 ம் தேதிக்குள் ஜப்பானில் மீண்டும் ஒரு பூகம்பம் ஏற்படும். வருகிற 17 ம் தேதிக்குள் இந்தோனேசியா நாட்டில் ஜாவா, சுமத்ரா தீவுகளில் பூகம்பம் ஏற்படும். 

அதே போல் துருக்கி, ஈரான், கிரீஸ் ஆகிய நாடுகளிலும் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இலங்கையில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் இந்தோனேசிய பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் இலங்கையில் சுனாமி தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: