முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 20-ம் தேதி கலந்தாய்வு

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.15 - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில்  2011 -​2012​ஆம் ஆண்டில் ஏற்பட்ட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பபட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 70 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பணிநியமனக் கலந்தாய்வு நடக்க உள்ளது. 

இதுதொடர்பாக அரசின் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 70 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் எதிர்வரும் 20.02.2013 அன்று முற்பகல் 11.00 மணிக்கு  ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், எழிலகம் இணைப்பு, சேப்பாக்கம், சென்னை​5 என்ற முகவரியில் ஆணையர் தலைமையில் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறும் மேற்கண்ட நாளில் உரிய சான்றுகளுடன் அழைப்பாணை அனுப்பப்பட்ட நபர்கள் மட்டும் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: