முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

160 சிங்களவர்களை பத்திரமாக அழைத்து சென்ற போலீசார்

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, மார்ச். 22 - புத்தகயாவில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த 160 சிங்களவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டனர். தமிழகம் முழுவதும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயில் மூலம் வந்தடைந்த புத்த பிட்சுக்கள் மீது 3 பேர் கொண்ட கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து போலீசார் புத்த பிட்சுக்கள் தங்கியிருக்கும் இடங்கள் மற்றும் அவர்கள் வந்து செல்லும் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் புத்தகயாவில் இருந்து புறப்பட்டு ரயில் மூலமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு 160 சிங்களவர்கள் வந்தனர். 

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் 40 பேரும், ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயிலில் 120 பேரும் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்திறங்கினர். போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் ஏ.டி.ஜி.பி. சேகர், ஐ.ஜி. ஆறுமுகம் தலைமையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அவர்களை பத்திரமாக அழைத்து சென்று ஒரு வேனில் ஏற்றி எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் கென்னத் லேனில் உள்ள புத்தமடத்தில் கொண்டு இறக்கி விட்டனர். 

அங்கு 10 க்கும் மேற்பட்ட போலீசார் தினமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சிங்களர்கள் மீதான தாக்குதல் காரணமாக நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம், ஏர்லைன்ஸ் அலுவலகம் மற்றும் எழும்பூரில் உள்ள இலங்கை வங்கி ஆகியவற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்