முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஷ்கர் என்கவுன்டரில் மாவோயிஸ்ட்கள் 15 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

ராய்ப்பூர், ஏப்ரல்.17  - சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் மீது, பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 15 பேர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சத்தீஷ்கர் மாநிலத்தில், பிஜபூர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நேற்று அதிகாலையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. 

இந்த மோதலில் உயிரிழந்த மாவோயிஸ்ட் 9 பேரின் சடலங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். இன்னும் தேடும் முயற்சி நடைபெற்று வருகிறது. கூட்டாகச் சென்றுள்ள குழுவினர் திரும்பி வந்தபிறகே இதுபற்றிய முழு விவரமும் தெரிய வரும் என்று பிஜபூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பிரசாந்த் அகர்வால் தெரிவித்தார்.          

 சத்தீஷ்கர் மாநில போலீஸார், ஆந்திர மாநில போலீஸார், மத்திய ரிசர்வ் படையினர் அடங்கிய கூட்டுக்குழுவினர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தினர். அவர்கள் சோதனை மேற்கொண்டபோது எதிர்தரப்பில் மாவோயிஸ்ட்கள் திருப்பி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீஸார் என்கவுன்டர் துப்பாக்கிசூடு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்றும், பயத்தினால் அவர்கள் திருப்பி துப்பாக்கியால் சுட்டனர் என்றும் இதையடுத்து போலீஸார் அவர்களை நோக்தி சுட்டனர் என்றும் இதற்குமேல் எதுவும் விவரம் தர இயலாது என்றும் அதிகாரி பிரசாந்த் அகர்வால் கூறினார்.

இந்த வனப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் கூட்டம் நடத்த உத்தேசித்துள்ளனர் என்று மத்திய புலனாய்வுத் துறை கொடுத்த தகவலின்பேரில் போலீஸார் அங்கு சென்று மாவோயிஸ்ட்களை தேடினர். இரு தரப்பினரும் துப்பாக்கியால் கடுமையாக சுட்டனர்.அவர்களிடமிருந்து அதி நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களது முகாம்கள் அழிக்கப்பட்டன என்றும் அகர்வால் தெரிவித்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு அவர்கள் காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்