முக்கிய செய்திகள்

மணப்பாறை அருகே தாய்​-மகள் தூக்குபோட்டு தற்கொலை

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      தமிழகம்
no image 18

 

மணப்பாறை. ஏப்.27 - மணப்பாறை அருகே தாயும் மகளும் ஒரே சேலையில் தூக்கிலிட்டு தற்ெகொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கம்(45). விதவையான இவரது மகள் ரம்யா(23). இதே ஊரை சேர்ந்தவர் மணி(எ) மூர்த்தி. மணி டெல்லியில் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இங்கே வந்துபோகும் சமயத்தில் மாணிக்கத்துக்கும், ரம்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் ஊரை விட்டு ஓடிவிட்டனர்.

ஊர் மக்கல் அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து ஊருக்கு அழைத்து வந்து ஊரார் முன்னிலையில் திருமணமும் நடத்தி வைத்தனர். புதுமனைவியுடன் டெல்லிக்கு மணி சென்றார். இந்த நிலையில் டெல்லியில் இருந்து மணி தனது ஊரில் உள்ள மனைவியின் தாயாருக்கு போன் செய்துள்ளார். இங்கே உன் மகளை காணவில்லை. அங்கே ஏதும் வந்து இருக்கிறாரா? என்று மணி போன் செய்து கேட்டுள்ளார்.

அவர் போன் செய்தபோது ரம்யா அவர்களது ஊரில் இல்லையாம்.

இதற்கிடையில் கடந்த ஞாயிறன்று ரம்யா தாதம்பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் மகளை தாய் தங்கம் கண்டித்துள்ளார். அப்போதுதான் ஏற்கெனவே விராலிமலையை சேர்ந்த ஒரு வாலிபரை காதலிப்பதாகவும், அதனால் நான் மணியுடன் சேர்ந்து வாழமுடியாது என்று கூறி அழுதுபுழம்பி உள்ளார்.

இதனால் தாய், மகள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மகளை தாய் தங்கம் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை இருவரும் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துள்ளார்கள். இதன் பின்னர் அவர்களை பக்கத்து வீட்டுக்காரர்கள்  யாரும் பார்க்கவில்லையாம். சந்தேகப்பட்டு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தாய் மகள் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

புத்தனாம்பட்டி எஸ்.ஐ. ஸ்ரீதேவி, வையம்பட்டி இன்ஸ்பெக்டர் அதிவீரராமபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் மகள் ஒரேசேலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: