நிலக்கரி ஒதுக்கீடு விவகாரம் உலகநாடுகள் சிரிக்கின்றன-பிரதமர்

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

புதுடில்லி, ஏப், - 28 - நிலக்கரி ஒதுக்கீடு விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றம் முடக்கப்படுவதை பார்த்து உலக நாடுகள் சிரிக்கினறதாக பிரதமர் கவலை தெரிவித்துள்ளார். நிலக்கரி ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட அமைச்சர் சிபிஐயிடம் விவரங்களை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் கூறியுள்ளார். நிலக்கரி நிலக்கரி ஒதுக்கீடு விவகாரம் குறித்து பிரதமர் மன் மோகன்சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்ட அமைச்சர் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். இந்தப் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கி வைப்பதைப் பார்த்து உலக நாடுகள் சிரிக்கின்றன. எனவே நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும் என்றும் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: