முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறில் தண்ணீரை தேக்கி வைக்க உரிமை உள்ளது

புதன்கிழமை, 24 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 25 - முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை ஏற்க கேரள அரசு மறுத்து விட்டது. இதற்கு மாறாக அணையின் நீர் மட்டத்தை 126 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரள சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் நீதிபதிகள் தத்து, சந்திரமவுலி, கிருஷ்ணபிரசாத், மதன் பி லோகுர், இக்பால் ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கில் இறுதி விசாரணை நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழக அரசு சார்பில் வக்கீல் வினோத் பாப்டேவும், கேரள அரசு சார்பில் வக்கீல் ராஜீவ் தவானும் ஆஜரானார்கள். நேற்று முன்தினம் நடந்த முதல் நாள் விவாதத்தின் போது அணை உறுதியாக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2 வது நாள் விவாதம் நேற்று நடந்தது. 

1935 ம் ஆண்டு சட்டப்படி முல்லைப் பெரியாறு அணையில் நீரை தேக்கி வைக்க தமிழகத்துக்கு உரிமை இருப்பதாக தமிழக அரசு வக்கீல் வினோத் பாப்டே வாதாடினார். அதற்கு நீரை தேக்கி வைக்க எப்படி உரிமை கோர முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 1935 ம் ஆண்டு சட்டப்படி மாநிலங்களுக்கு உரிமை தானாக வந்து விடும் என்று தமிழக அரசு வக்கீல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பழைய கூட்டம் தொடர்பான ஒருங்கிணைந்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago